தோழர்.கார்த்தி
குடும்ப நிவாரண நிதி
அன்பு வேண்டுகோள்
சென்னை ஜெகன் இல்லத்தில்
நமது NFTE சங்க அலுவலகத்தில்
பணி புரிந்த தோழன்.கார்த்தியின்
அகால மரணம்
நம் நெஞ்சை விட்டு அகலாதது.
சிதம்பரம் புவனகிரி பகுதியில்
சமுதாயத்தின் அடித்தட்டில் பிறந்த
கார்த்தியின் குடும்பம் மிகப்பெரியது.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும்
மிகவும் பின் தங்கிய குடும்பம்
மிகவும் பின் தங்கிய குடும்பம்
தோழர்.கார்த்தியின் குடும்பம்.
கார்த்தியை நம்பி இருக்கும்
வயதான தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள்
இப்போது நிர்க்கதியாய் நிற்கின்றார்கள்.
கார்த்தியின் சேவையை நினைவு கூறும் நாம்
கார்த்தியின் இடத்தில் இருந்து
அந்தக்குடும்பத்திற்கு
உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமையாகும்.
எனவே கீழ்க்காணும் தோழர்களைக் கொண்ட
உதவிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தோழர் .கார்த்தியின் குடும்ப நிவாரண நிதிக்கு
தோழர்கள்
மனமுவந்து நிதி தந்திட அன்புடன் வேண்டுகிறோம்.
நமது மாவட்டச் சங்க நிர்வாகிகள் , கிளைச்செயலர்கள்
மற்றும் முன்னணித்தோழர்கள் முனைப்புடன்
செயல்பட்டு
கார்த்தியின் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டும்.
தோழமையுடன்
உதவிக்குழு உறுப்பினர்கள்
ஆர்.கே.,
பட்டாபி., சேது..
அசோகராஜன்... ஸ்ரீதர்.. மாரி..
====================================================
தோழர்.கார்த்தியின் மாத நிறைவு நினைவஞ்சலி
25/04/2016 அன்று புவனகிரியில் நடைபெறவுள்ளதால்
தோழர்கள் அதற்கு முன்னதாக தங்கள் பங்களிப்பைச் மாவட்ட சங்கத்திடம் கொடுத்திடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
No comments:
Post a Comment