.

Monday, April 18, 2016


ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்படும்:
மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா தகவல்
           பண்டாரு தத்தாத்ரேயா

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச மாதாந்திர ஊதியம்   ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். இதுகுறித்து விரைவில் நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தொழிலா ளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஹைதரா பாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இப்போதைய நடைமுறைக் கேற்ப தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சர்வதேச நிலவரத் துக்கேற்ப தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது.ஆனால், இதுதொடர்பான சட்டத் திருத்தங்களை நாடாளு மன்றத்தில் இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றன. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி நிர்வாக உத்தரவு மூலம் விரைவில் இந்த அம்சங்களை செயல்படுத்த உள்ளோம்.
ஒப்பந்த தொழிலாளர் (கட்டுப்பாடு மற்றும் நீக்குதல்) மத்திய விதிமுறைகளின் 25-வது பிரிவில் திருத்தம் செய்யவும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகள் சட்ட அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இது தொடர்பாக நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
18-04-2016


                          நன்றி:-

No comments:

Post a Comment