அண்ணல் Dr.B.R.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா.....
கடலூர் மாவட்ட NFTE சங்கம் நடத்திய அண்ணல் Dr.B.R.அம்பேத்கார்
அவர்களின் 125வது பிறந்தநாள் விழாக்கூட்டம் 15.04.2016 மாலை
கடலூர் BSNL வாடிக்கையாளர் சேவைமைய அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி தலைமையேற்று
நடத்தினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் அம்பேத்கார் அவர்களின் உருவப்படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம் வரவேற்புரை நிகழ்த்த கூட்டம் இனிதே துவங்கியது. மாநில துணைத் தலைவர்
தோழர்.V.லோகநாதன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன். சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன் ஆகியோர் அண்ணல்
அம்பேத்காரின் கருத்துக்களை, செயல்பாட்டினை
விளக்கினர். மாநிலசெயலர் தோழர்.R.பட்டாபிராமன். தனக்கே உரிய பாணியில் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை
வரலாற்றையும் அவரின் சமூக போராட்ட குணங்களை பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். இறுதியாக மாவட்ட
செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் மாவட்டம்
முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment