13-5-2016 -தமிழ்மாநில சங்க அறிக்கையின் தமிழ்வடிவம்
தமிழ்
மாநில சங்கம்
(அறிக்கை
எழுதிய நேரம் 13/05/16 விடியற்காலை
3 மணி)
புரிந்து கொள்வோம், மக்கள் தீர்ப்பை—
மனதில் நிறுத்துவோம், மகேசன் தீர்ப்பை !
நடந்து முடிந்த 7—வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் தொழிலாளர்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குவோம்! வாக்களித்த
தோழர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்கள் BSNLEU மற்றும்
NFTE BSNL இரண்டு சங்கங்களையும் -- நிறுவனத்தின் நலனையும் ஊழியர்கள் நலனையும் பாதுகாத்திட -- பிரச்சனைகளை விவாதித்துத் தீர்க்கும் பேச்சு வார்த்தை மேஜைக்குத் தெரிந்தெடுத்து
அனுப்பி உள்ளார்கள்.
ஊழியர்கள் தந்த தீர்ப்பு எந்த ஒரு சங்கமும் மற்றொரு சங்கத்தை முற்றாக துடைத்து ஒழித்து விடுவதற்காக அல்ல. மாறாக, சமதான
சகவாழ்வு வாழவும் பிரச்சனைகளைத் தீர்த்திட ஒன்றாய் இணைந்து செயல்படவும் வழங்கிய தீர்ப்பே ஆகும்.
2013-–16
காலகட்டத்தில் இரண்டு சங்கங்களின் இணைந்த செயல்பாடுகளால் சில பிரச்சனைகளைத் தீர்த்து வைத்த வழிமுறைக்கு, ஒருவகையில், மறைமுகமாய் அவர்கள் தந்த அங்கீகாரமே இந்தத் தீர்ப்பு. ஆய்வுக்குரிய அந்த
காலத்தில் பென்ஷன், பதவி உயர்வு, ரெகுலரைசேஷன், கேடர் சீரமைப்பு மற்றும் தேர்வுகள் மூலம் கேடர் முன்னேற்றம், 2002 / 2007 ஊதிய மாற்றம் முதலியன சாதிக்கப்பட்டன. BSNL ல் இருபெரும்
சக்திகளும் கருத்தொற்றுமை அடிப்படையில் இணைந்து போராடினால் ஒழிய இங்கு எந்த ஒரு போராட்டமும் முழுவீச்சுடன் நடைபெறவும் முடியாது, எந்த ஒரு
தீர்வும் எட்டப்படாது என்பதையும் தங்களுடைய அனுபவங்களால் ஊழியர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
6—வது
சரிபார்ப்புத் தேர்தல் போலவே இம்முறையும் BSNLEU 49 சொச்சம்
சதவீதம் பெற்று முதல் இடத்தையும் NFTE BSNL 31 சொச்சம்
சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
பேச்சு வார்த்தை நடத்த அதிகாரமுள்ள JCM முதலான அமைப்புகளுக்கு -– முழு அங்கீகாரச் சலுகைகளோடு-- தங்களின் சார்பாக வாதாட, இந்த இரண்டு
சங்கங்களும் கூட்டாகப் பெற்றுள்ள 80 சதவீத வாக்குகள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே ஊழியர்களின் விருப்பமாகும். முடியுமானால், ஏனைய சங்கங்களையும் இணைத்துக் கொண்டு முழு 100 சதவீத கூட்டு பேர சக்தியை -- அதன் ஆகப் பெரிய வடிவில் -- நிர்வாகத்தின் முன் வெளிப்படுத்துவதே அவர்களின் பெரு விருப்பமாக இருக்கும்.
தேர்தல் முடிந்து விட்டது. பிரச்சாரங்களை, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரியிறைக்கும் வார்த்தை விளையாடல்களை, அடுத்தவர் அழுக்கை பொதுவெளியில் அலசும் அவலங்களை நிறுத்துவோம் ! வெறுப்பை விதைத்தலை வீசிஎறிந்து, தோழமையைக் கட்ட அடிமட்டம் தொடங்கி களத்தைச் செம்மை செய்யத் துவங்குவோம்!
கோரிக்கைகளைப்
பட்டியலிடவும் அதை ஒவ்வொன்றாய் வென்றெடுக்கவும் உகந்த இசைவான சூழலை உருவாக்க வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது. நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நம்முன்னே எண்ணிறைந்து உள்ளன.
நம்முடைய
கவனத்தை எல்லாம் பொதுவான பிரச்சனைகளின் மீது ஒன்று குவிப்போம் ஏற்புடைய நியாயமான தீர்வுகளை எட்டுவோம்!
நம் அனைவரின் எண்ணத்திலும் பொதுவாய் இருக்கும் சில பிரச்சனைகள், 78.2 அடிப்படையில் வீட்டுவாடகைப்படி மற்றும் ஓய்வூதியம், போனஸ் உரிமையை வருவாய் / லாப அடிப்படையிலிருந்து விலக்கி கணக்கிடச் செய்து பெறுவது, ஊதிய தேக்கப்
பிரச்சனைகள், தற்போதைய அனைத்து அசிஸ்டென்ட் டெக்னீஷியன்களையும் (RM/Gr D) அஞ்சல் இரயில்வே துறையில் உள்ளது போல பல்திறன் ஊழியர்களாகத் தரம் உயர்த்தி மூன்றாம் பிரிவு ஊழியர்களாக மாற்றுவது,
NEPP பிரச்சனையில் SC ST ஊழியர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவது, 4—வது சனிக்கிழமை விடுமுறை பெறுவது, விதி 55 ii b சட்ட அமுலாக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள பணி பாதுகாப்பு பிரச்சனை, அனைத்திற்கும் மேலாக
அடுத்த ஊதிய மாற்றம் மற்றும் பென்ஷன் மாற்றம், அரசுப் பென்ஷனைப்
பாதுகாப்பது முதலியன.
எந்தவிதமான
போலியான தன்மான/கௌரவ நிலைபாடு
களிலிருந்து வெளிவருவோம். டெலிகாம் துறை அனைத்து ஊழியர்களின் முழுமையான சக்தியை ஒன்று திரட்டி BSNL நிறுவனத்தைப் பாதுகாப்போம் ; நமது
கோரிக்கைகளை வென்றெடுப்போம் !
“ நமது தோழர்கள்
வழங்கிய தீர்ப்பைப் புரிந்து கொள்வோம்! அதனைத் தலை
வணங்கி தாழ்மையுடன் ஏற்போம்! தீர்ப்பின் திசைவழி
செயல்படுவோம் ! “ என்பதே 7 வது சரிபார்ப்பு தேர்தல் வழங்கிய எளிமையான செய்தியாகும்.
தோளோடு
தோள் சேர்த்து வெற்றிக்ககாகக் கடுமையாக பாடுபட்ட தோழமைச் சங்க TEPU-SEWA-PEWA தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி உரியது.
தமிழ்
மாநிலத்தை மரபார்ந்த பெருமிதத்துடன் முதன்மை பெறச் செய்த அனைவருக்கும் நன்றி ! நமது
தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட -- அதற்கென மேலும் கடுமையாக உழைத்திட -- பெரும் உற்சாகத்தோடு அந்த வர்க்கப் பணியில் நம்மை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம் !
தொழிலாளர்
ஒற்றுமை ஓங்குக !
N F
T E ஜிந்தாபாத்
!
தகவல் பலகைக்கு
Good nice thanks
ReplyDelete