.

Monday, June 6, 2016

செயலகக்கூட்டம் 06-06-2016

06-06-2016 மாலை கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன், மூத்தத்தோழர் தமிழ்மணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணித் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,
  • டெலிகாம் டெக்னிசியன் (TT) சுழல் மாற்றலை ஜூன் இறுதிக்குள் நிர்வாகம் நடத்துவதற்கான நடவடிக்கையை செய்திட வலியுறுத்தியும், அதற்குறிய விபரப்பட்டியல்களை மாவட்டசங்கத்திடம் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும்,
  • ஜூலை மாதம் பணிஓய்வு பெறும்  சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் பாராட்டு விழா மாவட்ட சங்கத்தின் சார்பில் விமரிசையாக நடத்துவது எனவும், விழாவிற்கான நன்கொடையாக ரூபாய்200/-யை அனைத்து தோழர்களும் அளிப்பது எனவும்,
  • 25-6-2016 மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி அவர்களுக்கு கள்ளக்குறிச்சி கிளையில் நடத்தப்படும் பணிஓய்வு பாராட்டு விழாவில் மாநிலசெயலர் தோழர் பட்டாபி உட்பட பல முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அக்கூட்டத்திற்கு தோழர்கள் திரளாக கலந்து கொள்வது என மாவட்டசங்கம் வேண்டுகிறது.
  • ஜூலை 21-22 தேதிகளில் வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான கடலூர் மாவட்ட பங்குதொகையைவிரைவில் அளிக்க ஏதுவாக அனைத்துக் கிளைகளும் நன்கொடையை விரைந்து அளிக்க செயலகக் கூட்டம் வலியுறுத்துகிறது.
  • மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிர்வாகப்  பிரச்சனைகளை வலியுறுத்தி மாவட்ட முழுவதும் உள்ள கிளைகள் தோறும் 14-06-2016 அன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், 21-06-2016 அன்று மாவட்ட அளவில் தர்ணா நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • சிரில் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் தமிழ்விழாவை ஜூலை முதல் வாரத்தில் நடத்துவது எனவும், அதற்கான விண்ணப்பங்களை கிளைச்செயலர்கள் பெற்று அறக்கட்டளைக்கு உடனடியாக அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment