.

Sunday, June 26, 2016

தோழர் P.அழகிரி பணிஓய்வு பாராட்டு விழா
கடலூர் மாவட்ட துணைத்தலைவர்  தோழர் P.அழகிரி பணிஓய்வு பாராட்டு விழா  கள்ளக்குறிச்சிக்கிளையின்  சார்பில்  கிளைத்தலைவர் தோழர் K.பாண்டியன் தலைமையில் 25-6-2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. தோழர் K.ராமன் வரவேற்புரை நிகழ்த்திட மாநிலதுணைத்தலைவர் தோழர்  V.லோகநாதன் துவக்க உரைநிகழ்த்தினார்.
மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், மாவட்ட செயலர் தோழர்  இரா.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் D.குழந்தைநாதன், K.அம்பாயிரம், D.இரவிச்சந்திரன், A.ரவிச்சந்திரன், A.C.முகுந்தன்,  கிளைசங்க செயலர்கள் தோழர்கள் கடலூர் S.ராஜேந்திரன், விழுப்புரம் G.கணேசன், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்  P.சுந்தரமூர்த்தி, மாநில உதவி செயலர் தோழர் தஞ்சை K.  நடராஜன், சேலம் மாவட்டசெயலர் தோழர்  C.பாலகுமார், குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், மாநிலத் துணைத்தலைவர் தோழர் G.வெங்கட்ராமன், கடலூர் முன்னாள் மாவட்ட செயலர் தோழர் என்.கே.எஸ், AIBSNLPWA சங்கத்தின் சார்பில் தோழர் P.ஜெயராமன், TMTCLU மாவட்டசெயலர் தோழர் G.ரங்கராஜு, TMTCLU மாவட்ட அமைப்புசெயலர் தோழர் V.இளங்கோவன், TMTCLU மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் மற்றும் அதிகாரிகள் திரு.காந்தி, திரு.ராஜவேலு ஆகியோரும் தோழரை  வாழ்த்தி  உரையாற்றினர். 
மேலும் மூத்தத் தலைவர்கள் தோழர்T.ரகு, தோழர் S.தமிழ்மணி,தோழர் ஆர்.கே, தோழர் சேது, சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன், அகிலஇந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்,P.காமராஜ் ஆகியோரும் வாழ்த்தினர். மாநில  செயலர் தோழர் பட்டாபி அவர்களும், AITUC மாநில பொதுசெயலர் தோழர் T.K.மூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
 சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.உதயசூரியன் அவர்களும் கலந்து கொண்டு தோழர் அழகிரியை வாழ்த்தினார். இறுதியாக தோழர் அழகிரி ஏற்புரை நிகழ்த்திட கல்லை  உதவி கிளைசெயலர் தோழர் N.ராஜாராமன் நன்றி தெரிவித்தார்.  விழா ஏற்பாடுகளை கிளைசெயலர் தோழர் S.மணி  உள்ளிட்ட கிளைத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். அத்தோழர்களுக்கு மாவட்ட  சங்கத்தின் வாழ்த்துக்கள். 






No comments:

Post a Comment