.

Tuesday, July 19, 2016

மாநில மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்!
பல கூட்டங்கள், தொழிற்சங்க  கருத்தரங்குகளில் பெற முடியாத செய்திகளை/அனுபவங்களை எல்லாம் தருவது நமது மாநில மாநாடு.
       அந்த அனுபவம் மாநாட்டு விவாதங்களை கூர்மையாக கேட்பது மற்றும் முழுமையாக மாநாட்டில் பங்கேற்பதன் வாயிலாகவே நமக்குக் கிடைக்கும்.
       மாநாடு என்பது இயக்கத்தின் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகும். நமது செயல்பாடுகளைச் சீர் தூக்கி பார்க்கவும், எதிர்கால திட்டமிடலை இறுதி செய்வதற்குமான முக்கிய இடம்.
       எடுத்த முடிவைச் செயல்படுத்த, இலக்கை எட்ட, தலைமைக்குழுவைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை  மாநாடே இறுதி செய்கிறது.
       எனவே தோழர்களே! மாநாட்டின் வெற்றியே நமது ஒரே பணி!
       எந்த சூழ்நிலையிலும் எந்த சவாலையும் எதிர்கொண்டு மாநில மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்!

வேலூர் கோட்டையில் சந்திப்போம்!

No comments:

Post a Comment