தர்ணா-12.08.2016
NFTE-BSNL,SEWA(BSNL),PEWA,TEPU மத்திய
சங்கங்கள் இணைந்த தேசிய கூட்டமைப்பு ஆகஸ்ட்’12 அன்று ஏழு
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய தர்ணா நடத்திட அழைப்பு விடுத்தது. கூட்டமைப்பின்
அறைகூவலை ஏற்று கடலூர் மாவட்ட கூட்டமைப்பு அமைக்கப்பட்டு இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை கூட்டமைப்பு
தலைவர் தோழர் S.வாசுதேவன்-SEWA(BSNL) தலைமையில் கடலூர் GM
அலுவலக வாயிலில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தேசிய கூட்டமைப்பு கன்வீனரும்
மாவட்ட செயலருமான தோழர்இரா.ஸ்ரீதர்
வரவேற்புரை நிகழ்த்தினார். நமது மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன்
துவக்கவுரை உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி நமது மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம், PEWA மாவட்ட செயலரும்,
கூட்டமைப்பின் இணைச்செயலருமான தோழர் V.நல்லத்தம்பி, மாநில
சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் V.இளங்கோவன், தோழர் N.அன்பழகன்,
மாவட்ட உதவிசெயலர்கள் தோழர் D.ரவிச்சந்திரன், தோழர்
D.குழந்தைநாதன், மூத்தத் தலைவர் தோழர் S.தமிழ்மணி
மற்றும் சிரில் அறக்கட்டளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
தோழமை சங்க நிர்வாகிகள் AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் S.ஆனந்த், ஓய்வூதியர் நலசங்க(AIBSNL PWA) கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் K.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கடலூர் மாவட்ட FNTO மாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன் உடல்நலக்குறைவினால் கலந்து கொள்ளவில்லை.
நிறைவாக மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார். கடலூர்
மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி நன்றியுரையாற்றினார்.
தர்ணா போராட்டத்தில் மாவட்ட முழுமையும் இருந்து அனைத்து கிளைகளிலிருந்தும்
நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டது
சிறப்பாகும்.
No comments:
Post a Comment