.

Thursday, August 11, 2016

மாவட்ட செயற்குழுக் கூட்டம்
சிறப்புகள் பல கொண்ட செம்மையான செயற்குழு

மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் குறித்த நேரத்தே துவங்கியது.
அனைத்து கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றது.
வேலூரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர், மாநிலச் செயலர், மாநில பொருளாளர், மாநில அமைப்புச் செயலாளர் இவர்களோடு நமது மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நால்வர் ஒருங்கே என பங்கேற்றது.
வேலூரில் சூல் கொண்ட ஒற்றுமை கடலூரில் மலர்ந்து மணம் வீசியது.
அனைத்துக் கிளைச் செயலர்களும் TM சுழல் மாற்றல், ஆகஸ்ட் 12 கூட்டமைப்பு தர்ணா, தங்கள் பகுதிப் பிரச்சனைகள் என சுருக்கமாக தெளிவாக கூறியது.
தர்ணா கோரிக்கைகளைப் பற்றி மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் தமது துவக்க உரையில் விளக்கமாக எடுத்துரைத்தது.
செயற்குழுவிற்கு முதல் நாள் விபத்தில் அகால மரணமடைந்த சிதம்பரம் தோழர் G. பாண்டியன் மற்றும் நமது தலைவர் அண்ணாச்சி D ரெங்கநாதன், திரைத்துறைக் கலைஞர் பஞ்சு அருணாசலம், எழுத்தாளர் வே. சபாநாயகம், கவிஞர் ஞானக் கூத்தன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேகமாக ஆனால் எதையும் விட்டுவிடாதவகையில் சென்ற மாவட்டச் செயற்குழுவிற்கு பிறகு நிகழ்ந்த அனைத்து மாவட்ட செய்திகளையும் தொகுத்து மாவட்டச் செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் அவர்களின் அறிமுக உரை.
ஆகஸ்ட் 12 தர்ணாவில் விரிவாகப் பேசலாம் என தங்கள் வாழ்த்துரையை சுருக்கிக் கொண்ட மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் என். அன்பழகன், தோழர் V. இளங்கோ மற்றும் தோழர் V. நல்லதம்பி (PEWA) ஆகியோரின் சீரிய சிற்றுரை.
ஸ்ரீதரின் அணுகுமுறையை வரவேற்று வாழ்த்துரைத்த புதிய மாநில உதவிச் செயலர் நமது தோழர் P.சுந்தரமூர்த்தி மற்றும் மாநில துணைத்தலைவர் நெய்வேலி V. லோகநாதன் ஆற்றிய வாழ்த்துரை.
இவர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் கைத்தறியாடை அணிவித்து மரியாதை செய்த நமது முன்னணித் தோழர்கள்

முற்பகல் சமோசா தேனீர் போலவே நல்ல மதிய உணவு 
நமது மூத்த தலைவர் எஸ். தமிழ்மணி, மாநில அமைப்புச் செயலராக வேலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தோழர் பாலமுருகனின் நறுக்கான தெறிப்பு பேச்சு
புதிய மாநிலச் பொருளாளர், கோவையின் மாவட்டச் செயலாளர் தோழர் எல்.சுப்புராயனின் அனுபவம் சார்ந்த ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து புதிய நிர்வாகிகளில் பெரும்பாலனோர் மாநிலச் செயலர் போல இளைஞர்கள் என்பதில் பெருமகிழ்வு கொண்ட நெஞ்சில் நின்ற சிறப்புரை
புதிய மாநிலச் செயலர், இளைஞர் அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்த போராளி, தஞ்சை மண்ணின் வித்து, நமது மாவட்டத்திற்கு மாப்பிள்ளை தோழர் கே. நடராஜன் அவர்களின் நகைச்சுவை மிளிர்ந்த உற்சாக உரை
இதனோடு கூட இன்னொரு மட்டை விளாசல் இன்னிங்ஸ் என மாவட்டச் செயலரின் தன்னம்பிக்கை மிகுந்த பொறுப்பான தொகுப்புரை.  மாவட்ட சங்க செயல்பாடுகளின் மீது மாவட்ட இணைய தளத்தின் எழுத்து குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்அதனைத் தன்னிடம் நேராக அல்லது அமைப்பின் கூட்டங்களின் வாயிலாகஏனெனில், மாவட்டச் செயலரின் முகநூல் போல அன்றி இணையதளம் மாவட்ட சங்கத்தின் சொத்து என்றவர், மாவட்டச் செயலராக பொறுப்பேற்று ஆண்டுகள் போன பின்பும் சில கிளைகளின் பொதுக் குழுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாமைக்கு ஆதங்கப்பட்டு, இனி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.  ஆகஸ்ட் 12 தர்ணாவிற்கு திரளாக தோழர்களை அழைத்து வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.  TM சுழல் மாற்றல் நியாயமாக விரைவில் நடத்தி முடிக்கப்படும் என உறுதி கூறினார்.
தேனீரோடு  சுவையான சுண்டல் வழங்கப்பட்டது.
மாவட்ட செயற்குழுவில் தோழர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எட்டு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு அவை ஒருமனதாக ஏற்கப்பட்டது. (தீர்மானங்கள் தனியே)
மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உற்சாகமூட்டி உரையாற்றிய தலைவர்களுக்கு கலந்து கொண்ட தோழர்களுக்கு மற்றும் முற்பகல் சிற்றுண்டி வழங்கிய JAO தேர்வில் வென்ற தோழர் ஆர். ஸ்ரீநாத் மற்றும் பிற்பகல் சிற்றுண்டி வழங்கிய GM அலுவலகத் தோழர் குணசேகரனுக்கும் நன்றி கூறிய பிறகு சரியான நேரத்தில் செயற்குழு நிறைவடைந்தது, எதிர்கால இலக்குகளை நெஞ்சில் நிலைநிறுத்தி !
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

       இங்குள்ள தோழர்கள் ஒன்றாதல் கண்டே

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

     மங்காத சங்கமென்று சங்கே முழங்கு!”





No comments:

Post a Comment