.

Wednesday, August 31, 2016

புதுவைத் தோழர் செல்வரங்கம்
பணி நிறைவு


 1974 மைசூரில் நடைபெற்ற சம்மேளனகூட்டத்தில்  மஸ்தூர்களை NFPTE இயக்கத்தில் இணைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவிலேயே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தோழர் ஜெகன் தலைமையில்  மஸ்தூர் கிளை சங்கம் துவக்கப்பட்டது. அதன் முதல் கிளை செயலராக தோழர் M.செல்வரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று பணி நிறைவு வரை தொடர்ந்து சங்கப்பணியில் பணியாற்றிய தோழர் நிரந்தர ஊழியர்களின் செயலராக, மாவட்ட உதவி செயலராக புதுவையில் பல்வேறு தோழர்கள் மாவட்ட செயலர்கள் பணியாற்றிய காலத்திலேயே அவர்களுக்கு உறுதுணையாக புதுவையில் இயக்கத்தை கட்டியமைத்த தோழர்களில் முதன்மையானவர். சங்கத்தைத் தாண்டி மனித நேயத்தோடும் பல்வேறு தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர் செல்வரங்கம். இலாக்கப் பணியிலும் எந்த அதிகாரியும் குறை சொல்ல இயலாத அளவிற்கு செயல்பட்ட தோழர்.
NFTE சங்கத்தின் புதுவை மாவட்ட செயலராக 2015-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு    திறம்பட பணியாற்றிவருகிறார். அவரது பணி மேலும் சிறக்க கடலூர் மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.






     

1 comment:

  1. ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete