செஞ்சிகிளைமாநாடு-29.08.2016
செஞ்சி கிளை மாநாடு மற்றும் கிளைச்சங்க உறுப்பினர் தோழர்
N. உத்தண்டி அவர்களின் பாராட்டு விழாவும் 29.8.2016 செவ்வாய்கிழமை செஞ்சி தொலைபேசி நிலையத்தில் கிளைத்தலைவர் தோழர்G.பாலாஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் வாயிலில்
நமது சம்மேளனக்கொடியை மாநிலசெயலர் தோழர் K.நடராஜன் ஏற்றிவைத்து,
புதியக் கொடிக்கம்பக் கல்வெட்டை திறந்து வைத்தார். தோழர் Y.ஹாரூன்பாஷா தனது கம்பீரக்குரலில் கோஷம் எழுப்பிட
முறையாக மாநாடு துவங்கியது. தோழர்ஹாரூன்பாஷா வரவேற்புரை நிகழ்த்திட,
மாநில துணைத்தலைவர் தோழர்V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாநாட்டு ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு (ஆண்டறிக்கை தனியே இணைக்கப்பட்டுள்ளது) சிறுதிருத்தங்களுடன்
அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் புதியநிர்வாகிகள் தேர்வு
நடைபெற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக
தோழர் G.பாலாஜி, செயலராக தோழர் R.ரவி, பொருளராக தோழர் A.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து விழுப்புரம் கிளைச்செயலர் தோழர் G.கணேசன்,
AIBSNLEA மாநில துணைத்தலைவர் S.நடராஜன்,
மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட செயலர் தோழர்இரா.ஸ்ரீதர், மாநில சங்கசிறப்பு அழைப்பாளர் தோழர்V.இளங்கோவன்,
மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி மற்றும் மாநிலசெயலர்தோழர்
K.நடராஜன் ஆகியோர் புதியநிர்வாகிகளை வாழ்த்தியும் ஓய்வு பெறும் தோழர்உத்தண்டி
அவர்களை வாழ்த்தியும் பேசினர். தோழர் N.உத்தண்டி
ஏற்புரையாற்றினார். தோழர் A.சேகர் நன்றி கூறினார். முன்னதாக செஞ்சி அலுவலக
ஊழியர்கள் சார்பில் ஓய்வு பெறும் தோழருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் கோட்டபொறியாளர், மற்றும்
ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். தோழரின் உற்றார்
உறவினர்கள் பலரும் கலந்துகொண்டது சிறப்பாகும்.
No comments:
Post a Comment