TMTCLU
கோரிக்கை விளக்கக் கூட்டம்
குடந்தை TMTCLU மாநில செயற்குழு அறைகூவல் விடுத்த
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்
அடிப்படையில் இன்று மாலை (22.9.2016) கடலூர் GM அலுவலக வாயிலில் எழுச்சிமிக்க கோரிக்கை
விளக்க கூட்டமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, துவக்கவுரையாற்றினார்.
NFTE மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன்,
மூத்தத்தோழரும், TMTCLU மாநில இணைப்பொது செயலருமான தோழர் S.தமிழ்மணி, TMTCLU மாநில உதவிச்செயலர்
தோழர் A.சுப்ரமணியன் விழுப்புரம் , NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர் D.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்புசெயலர்
தோழர் V.முத்துவேலு, GM அலுவலக NFTE கிளைத் தோழர் S.குருபிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம் சென்னையில் நிர்வாகத்துடன்
21-ந்தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்களை விளக்கினார். வருகின்ற 30-ந் தேதி
CGM அவர்களுடன் விவாதிக்கவுள்ளோம். நமது கோரிக்கைகளை வெல்வோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் எழுப்பப்பட்ட
கோரிக்கைகளில் பல நமது மாவட்டத்தில் தீர்க்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார். உதாரணமாக,
- நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது.
- EPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம்.
- மாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை.
- எந்த தோழர்களையும் பணி நீக்கம் செய்ய நமது சங்கம் அனுமதிப்பதில்லை. சங்கராபுரம் பகுதியில் பணியிலிருந்து இருவர் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டனர். அதே போல் கடலூர் பகுதியில் பணிபுரிந்த நால்வர் பிரச்சனையை விரைந்து தீர்க்க நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
- போனஸ் சென்ற ஆண்டு பெற்றோம். இந்த ஆண்டு முழுமையான போனஸ் பெற முயற்சிகளைத் துவக்கிவிட்டோம்.
BSNL விடுமுறை
நாட்களுக்கு ஊதியம் பெறும் பிரச்சனைத் தீர்க்கப்பட வேண்டும்.
கேரள மாநில உத்தரவு அமுலாக்கம் என்பது தமிழ்மாநில
நிர்வாகத்துடன் பேசி தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனை.
இறுதியில் தோழர் P.சுந்தராஜ் கிளைத்த தலைவர் அவர்கள் இறுதியாக நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
இறுதியில் தோழர் P.சுந்தராஜ் கிளைத்த தலைவர் அவர்கள் இறுதியாக நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment