Ø அக்டோபர் மாதம் GPF விண்ணப்பித்த சுமார் 140
தோழர்களில் கடலூர் மாவட்ட நிர்வாகக் கோளாறினால்
32
பேருக்கு மட்டுமே GPF பட்டுவாடா செய்யப்பட்டது. மாவட்ட சங்கம் இதனை அறிந்து
உடனடியாக இன்று DGM(Admn) அவர்களை சந்தித்து பிரச்சனையை விவாதித்தோம். மாநில சங்கத்திற்கும்
விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் மீதமுள்ள 108
தோழர்களுக்கு விரைவில் GPF பட்டுவாடா
செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Ø டெலிகாம் டெக்னிசியன் சுழல்மாற்றல் கவுன்சிலுக்கான
பட்டியலை நிர்வாகம் மாவட்ட சங்கத்திடம் அளித்தது. மாவட்ட சங்கம் அதிலுள்ள தவறுகளை
சுட்டிக்காட்டி நிர்வாகத்திடம் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளது. (ஆனால் இதுவரை BSNLEU
சங்கம் இது பற்றி கடிதம் அளிக்கவில்லை) வதந்திகளை நம்பவேண்டாம். சுழல்மாற்றல்
இம்மாத இறுதிக்குள் நடக்கும்.
Ø ஊழியர்களின் CR முறையாக பகுதி அதிகாரிகளால்
எழுதப்படாமல் இருப்பதினால் NEPP போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனையும்
மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விவாதித்தோம். நிர்வாகம் CR
எழுதப்பட்டவர்களுக்கு விரைவில் உத்தரவு வழங்கிட உறுதியளித்தது. தலமட்ட
அதிகாரிகளுக்கும் ஊழியர்களின் CR உடனடியாக எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளைச்
சங்க நிர்வாகிகள் தலமட்ட அதிகாரிகளை அணுகி CR எழுதப்படுகிறதா என்பதை கேட்டறியவும்,
எழுதப்பட்ட CRகளை தோழர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.
Ø உளுந்தூர்பேட்டை ஒப்பந்த ஊழியர் தோழியர் ஆராயி
அவர்களின் பிரச்சனையில் ஒப்பந்ததாரரிடம் தோழியரின் வருகைப்பதிவு முறையாக பராமரிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment