GPF பட்டுவாடா
நமது மாவட்டத்தில் நூற்றுக்கும்
மேற்பட்ட அக்டோபர் மாதம் GPF விண்ணப்பித்த தோழர்களுக்கு நிர்வாகக் காரணத்தினால் பட்டுவாடா செய்யப்படாமல் விடுபட்டு விட்டது. இதனை
நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றோம். நமது DGM(CFA) அவர்கள்
நமது நிலைமையினை புரிந்துகொண்டு தலைமைப் பொதுமேலாளர் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு
GPF பட்டுவாடா ஆக உரிய கவனம் செலுத்தினார். நமது மாநில
சங்கம் நேற்றும், இன்றும் தகுந்த முயற்சி எடுத்ததின் விளைவாக GPF இன்று அல்லது நாளை பட்டுவாடா செய்யப்படும். இதற்கு தொடர்ந்து முயற்சித்த DGM(CFA) அவர்களுக்கும், மாநில சங்கத்திற்கும் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
No comments:
Post a Comment