TMTCLU- செய்தி
NFTE-TMTCLU மாநில சங்கங்கள் இணைந்து
ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மாநில நிர்வாகத்துடன்
20-09-2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிர்வாகம் அனைத்து
மாவட்ட நிர்வாகத்திற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ஆகவே தலமட்ட NFTE-TMTCLU சங்க மாவட்ட செயலர்கள் தலமட்ட நிர்வாகத்திடம்
பேசி உரிய ஆவணங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிட வலியுறுத்திட வேண்டும். இது
பற்றிய தகவல்களை உடனடியாக மாநில சங்கத்திற்கும் தெரிவித்திடுமாறு தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
R.செல்வம்
மாநில பொதுச்செயலர்-TMTCLU
---------------------------------------------------------------------------------------------
கிருஷ்ணகிரியில் சுமார் 40 ஒப்பந்த ஊழியர் தோழர்கள் மாற்று
சங்கத்திலிருந்து நமது TMTCLU சங்கத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தங்களை
இணைத்துக் கொண்டனர். இதற்கு முன் முயற்சி செய்திட்ட தோழர் பாரதிதாசன் (ஒப்பந்த ஊழியர்-கிருஷ்ணகிரி)
BSNLEU சங்கத்தின் துரோகத்தினால் பழிவாங்கப்பட்டு இரண்டு மாத காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
நமது NFTE-TMTCLU மாநில சங்கத்தின் முயற்சியினால் மீண்டும் அந்த தோழர் பணியமர்த்தப்பட்டார்.
அத்தோழருக்கு நமது வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment