BSNL
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின்
கூட்டமைப்பு-கடலூர் மாவட்டம்
கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு
25-11-2016 டவர் கார்ப்பரேஷன் தனியாக அமைப்பதை ரத்து செய்வதற்கான தர்ணா போராட்டம் மிகச்
சிறப்பாக களம் நிறைந்து 150 தோழர்களுக்கும் மேலாக கலந்து கொண்டு
தோழர் P.சிவக்குமார் மாவட்ட செயலர் SNEA, தோழர் K.தனசேகரன்
மாவட்டத்தலைவர் AIBSNLEA ஆகியோரின் கூட்டுத் தலைமையில்
நடைபெற்றது. தோழர் E.விநாயகமூர்த்தி கிளைச் செயலர் NFTE ,
கோரிக்கை முழக்கம் எழுப்பி வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பித்தார்.
NFTE-யின் மாநில உதவிச் செயலர்
தோழர் P.சுந்திரமூர்த்தி துவக்கவுரை நிகழ்த்தினார். கண்டன உரையில் தோழர் அ.அண்ணாமலை மாநில அமைப்புச்
செயலர் BSNLEU , தோழர் விஸ்வலிங்கம் (AIBSNLEA) , தோழர்
வாசுதேவன் ( SEWA – BSNL ) தோழர் அசோகன் (SNEA) தோழர்
நல்லத்தம்பி ( PEWA –BSNL), தோழர் V.லோகநாதன் ( NFTE ), தோழர்
துரைபாண்டியன் (SNEA), தோழர் S.நடராஜன்(AIBSNLEA), தோழர் V.இளங்கோவன் (NFTE), தோழர் நடராஜன் ( SNEA) தோழர் R.செல்வம் ( NFTE) , தோழர்
N.திருஞானம் (ஓய்வு பெற்றோர் சங்கம்), தோழர் S.முத்துக்குமாரசாமி (ஓய்வு பெற்றோர் சங்கம்), தோழர் செந்தில்குமாரன் (SNEA)
, தோழர் ஆனந்த் (AIBSNLEA) , தோழர் D.குழந்தைநாதன்
( NFTE ) தோழர் S.பாண்டுரங்கன் ( SNEA)
, தோழர் N.அன்பழகன் ( NFTE ), தோழர் P.வெங்கடேசன் ( AIBSNLEA) , தோழர் அருட்செல்வம் ( SNEA) மற்றும் BSNLEU
மாவட்ட செயலர் தோழர் K.T.சம்மந்தம் ஆகியோர்
பொருள் பொதிந்த கண்டன உரை நிகழ்த்தினர். மூத்த தோழர் சு.தமிழ்மணி அவர்கள் முழுமையாக கலந்து கொண்டு
சிறப்பித்தார். இறுதியாக தோழர் பால்கி (SNEA) நிறைவுரையோடு, தோழர் R.V.ஜெயராமன் (BSNLEU) நன்றியுடன்
போராட்டம் நிறைவு பெற்றது.
தோழர்கள் மையக் கருத்தாக டவர் கார்ப்பரேஷன் அனுமதிக்க
முடியாது என்றும், 15-12-2016 –ல் நடைபெற இருக்கின்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நூறு
சதம் வெற்றிகரமாக்குவோம் என உறுதியேற்போம் என்றும் அழுத்தத்தோடு உணர்ச்சியோடு
பேசினார். மேலும் மத்திய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை
விமர்சனத்தோடு பட்டியிலடப்பட்டது.
நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ!
நாங்கள் சாகவோ! என்று ஆர்ப்பரித்து ‘ BSNL நிறுவனம் காப்போம்” என சபதமேற்ப்போம் என முழக்கத்தோடு முடிவுற்றது.
No comments:
Post a Comment