.

Monday, November 28, 2016

PIMS மருத்துவமனைக்கு அங்கீகாரம்

புதுவை PIMS மருத்துவமனைக்கு சில நாட்களாக அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பில் தொகை நிலுவையில் இருந்த காரணத்தினால் தோழர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கப்பட்டு வந்தது. 17.11.2016 இரவு நெய்வேலி தோழர் N.ராதாகிருஷ்ணன் T.T அவர்களுக்கு அவசர சிகிச்சை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். உடனடியாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுநாள் மாவட்ட நிர்வாகத்திடம் நமது கடுமையான அதிருப்தியை பதிவு செய்தோம்.  நிர்வாகம் சூழ்நிலையை புரிந்து கொண்டு மிக விரைவாக செயல்பட்டு 21.11.2016 முதல் PIMS மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தோழர்கள் இனி சிகிச்சைக்கு PIMS மருத்துவமனைக்கு செல்லலாம். 
காலதாமதமாக முடிவெடுத்தாலும் நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.  

No comments:

Post a Comment