TM சுழல் மாற்றல்
ஆர்ப்பாட்டம்தோழர்களே!
TM
சுழல் மாற்றல் புதிய ஒன்றல்ல. நான்காவது
முறையாக அமுல்படுத்தபட வேண்டிய ஒன்று. எனவே தாமதமின்றி நடத்தி இருக்க முடியும்.
கிளைச்செயலர்களின் ஒத்துழைப்போடு மாவட்ட சங்கம் நிர்வாகம் வழங்கிய மாற்றலுக்குரிய
தோழர்களின் பட்டியலை முழுமைசெய்து நிர்வாகத்திடம் அளித்துவிட்டோம். பல சுற்று
பேச்சு வார்த்தையும் நடத்திவிட்டோம். ஆனால், என்ன காரணத்தினாலோ நிர்வாகம் சுழல்
மாற்றலுக்கான கலந்தாய்வு தேதியை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது.
மேலும் தாமதம் நியாயமற்றது. எனவே தாமதமின்றி உடனடியாக சுழல் மாற்றலை
நடைமுறைப்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்தி முதற்கட்டமாக கிளைகளில் கவனஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
கிளைகள்
தோறும் வருகின்ற டிசம்பர் 2-ந் தேதி வெள்ளிக்கிழமை
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சக்தி
மிக்கதாக நடத்திட வேண்டுகிறோம்.
தோழமையுடன்
R.செல்வம் இரா.ஸ்ரீதர்
மாவட்ட தலைவர்
மாவட்ட செயலர்
குறிப்பு: கடலூரில் மதிய
உணவு இடைவேளையில் GM
அலுவலக வளாகத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment