.

Monday, January 9, 2017

தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமவேலைக்கு சம ஊதியம்
மாநிலம் தழுவிய சிறப்பான கருத்தரங்கம்







புத்தாண்டு 2017 ஜனவரி 7ம் தேதி காலை கடலூரில் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் தோழர் எஸ். தமிழ்மணி தலைமையில் மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
        இவ்வளவு மகிழ்வாகக் குறிப்பிட காரணங்கள் உண்டு.
1.         நாம் நடத்திய மாநாடுகள், கருத்தரங்கள், விழாக்கள், ஏன் செயற்குழுக் கூட்டங்கள் கூட இப்படிக் குறித்த நேரத்தில் தொடங்கி திட்டமிட்டபடி காலத்தே முடிந்ததில்லைநன்றிக்குரியவர்கள் காலை 9 மணிக்குக் கொடி ஏற்றும் போதே மாநிலம் முழுமையிலுமிருந்து பெரும்பான்மையானத் தோழர்கள் கொடிக்கம்பத்தின் கீழே காணரும் வீரர்களாகக் குவிந்ததுதான்நன்றி தோழர்களே.
   தாயின் மணிக்கொடியை கடலூர் தோழர் கே.செல்வராஜ் (STS ஓய்வு) அவர்களும் TMTCLU சங்கத்தின் செங்கொடியை மாநிலத் உதவிச் செயலர்  தோழர் A.சுப்பிரமணியன் அவர்களும் கடலூர் மாவட்டச் செயலர் தோழர் ஜி ரங்கராஜ் எழுப்பிய முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.
2.     கலந்து கொண்ட 350 கும் மேற்பட்டத் தோழர்களில் 262 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பது மற்றொரு காரணம்.
3.   ஏஐடியுசி மாநிலத்தலைவர் தோழர் K. சுப்புராயன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) தோழர் பட்டாபி, தோழர் என்கேஎஸ், மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் மாநிலச் செயலர் தோழர் நடராஜன் என அனைத்துத் தலைவர்களும் முழுமையாக கருத்தரங்கில் கலந்து கொண்டது
4.     மாநாட்டை  தலைவர் துவங்கும் போதே இன்று ஜனவரி 7 நமது ஞானத் தந்தை தோழர் டி. ஞனையா அவர்கள் தமது 97 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என அறிவித்ததும் மேடையில் தலைவர்களும், அரங்கில் நிரம்பியத் தோழர்களும் எழுந்து நின்று சில மணித்துளிகள் கரவொலி எழுப்பி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தது மறக்கவொண்ணா அனுபவம்.

இனி மாநாட்டின் நிகழ்வுகளின் சில தெறிப்புகள்
கடலூருக்கே உரித்தான விளம்பரப் பதாகைகள், நுழைவாயில், வழிநெடுக பங்கேற்க வருகை தரும் தலைவர்களை வாழ்த்தி வரவேற்கும் தட்டிகள் முத்தாய்ப்பாய் பிரம்மாண்டமான அரங்கத்தின் பின்புலம்உணர்வுப்பெருக்காய் முழக்கமிட்டு அரங்கத்தில் உள்நுழைகையில் வாயிலில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த  தோழர் குப்தாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி.
முறையான வரவேற்பை கடலூர் மாவட்டச் செயலாளர்  தோழர் ஜி.ரங்கராஜ் நல்க, NFTE மாநிலத் துணைத்தலைவர் தோழர் V. லோகநாதன் அஞ்சலி உரையாற்றிய பின் தியாகிகளுக்கு கருத்தரங்கில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
    சுருக்கமான தமது தலைமை உரையில் தோழர் தமிழ்மணி நாடு சுதந்திரம் பெற்ற உடன் முதல் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தது NFPTE என்பதான நமது சம்மேளனத்தின் பெருமைகளை சாதனைகளைக் கூறினார்தற்போது நாம் விவாதிக்க உள்ள தீர்ப்பு போல நமது சம்மேளனப் பொதுச் செயலர் தோழர் ஓம் பிரகாஷ் குப்தா முன்பே சமவேலைக்கு சம ஊதியம் தீர்ப்பைப் பெற்று லட்சத்திற்கும் மேற்பட்ட கேஷூவல் மஸ்தூர்கள் மற்றும் RTP களை நிரந்தரம் செய்ததைக நினைவூட்டி இன்னும் அந்தத் தீர்ப்பு செல்லத்தக்கதாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தமது தலைமையுரையை நிறைவு செய்தார்.

       
பொதுச்செயலாளர் தோழர் ஆர். செல்வம் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். ஒப்பந்த முறை ஒழிப்பிற்காக மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் தொடர் போராட்ட இயக்கங்களைப் பட்டியலிட்டு 26/10/2016 ல் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டங்களுக்குத் திட்டமிட வேண்டும் எனக்கூறி மீண்டும் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர் K.  நடராஜன் உணச்சிமிக்க எழுச்சித் துவக்க உரையாற்றினார். ஞானையாவுக்கு முதலில் வாழ்த்துக்களைக்கூறி உரையைத் துவக்கியவர் சங்கம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகவுள்ள TMTCLU சங்கம் NFTE--ன் அங்கம் AITUC--ன்  அங்கம் என பலத்த கரவொலிக்கிடையே முழங்கினார்ஓரு நல அரசாங்கம் தொழிலாளர்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லைஎனவே அதனை எதிர்த்து தஞ்சையில் போராடி வென்ற அனுபவத்தைக் கூறினார். குடந்தையில் கலெக்டர் நிர்ணயித்த ஊதியத்தைப் பெற்றோம்உத்தரவுகள் எவ்வாறு இருந்தாலும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளை மாநில நிர்வாகத்துடன் பேசுகிறோம். உங்கள் பொதுச்செயலாளர் சென்னை வரும் போதெல்லாம் மாநில நிர்வாகத்தைச் சந்திக்கிறார். நம்மிடையே 10 / 12 ஆண்டுகள் உழைத்த தோழர்கள் இருக்கிறார்கள்எக்ஜேஞ்சு நின்றபோதெல்லாம் உடன் இயக்கியவர்கள், மழை வெள்ள பாதிப்புகளின்போது கேபிள் பழுதுகளை நீக்கியவர்கள் நம்தோழர்கள். அவர்களுக்கு துணையாக NFTE சங்கம் நிற்கும்.  காண்ட்ராக்ட்  ஊழியர்கள் காசில் வாழும் ஈனச் செயலை NFTE  ஒருபோதும் செய்யாது. கடலூரில் எடுக்கும் எந்த முடிவும் அமலாகாமல் இருந்ததில்லை. மஸ்தூர்களை நிரந்தர ஊழியராக்குவேன் என்று இங்கு சொன்னதை குப்தா செய்து முடித்தார். மஸ்தூராக வந்த என்னை இன்று J E ஆக ஆக்கிய சங்கம் நிச்சயம் உங்களையும் உயரச்செய்யும் என்ற நம்பிக்கையைத் தந்து கருத்தரங்கைத் துவக்கி வைத்தார்.
தோழர் சேது அமைப்பை பலப்படுத்துங்கள் ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள் என ரத்தினச் சுருக்கமாக வாழ்த்தினார்.
மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் தமது கருத்துரையில் குடந்தை செயற்குழுவிற்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்களை விளக்கினார்மாநில நிர்வாகத்தை சந்தித்து பிரச்சனை எடுத்ததில் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களை EPF எண், அடையாள அட்டை வழங்குவது முதலிய பிரச்சனைகளை குறிப்பிட்ட காலவரையரையில் செய்து முடிக்க அறிவுறுத்தி கடிதம் எழுதியதுஆனால் தலமட்டங்களில் தாமதம் நிலவுவதால் அதனை செய்து முடிக்க நாம் நிர்பந்திக்க வேண்டும்.  மேலும் கேரளாவில் செய்யும் பணிக்குத் தக்கவாறு கேடகரைசேஷன் ( ஸ்கில்டு / செமி ஸ்கில்டு / அன்ஸ்கில்டு என தரம் பிரித்தல்) செய்து ஒப்பந்த ஊழியர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் முறையை தமிழ் நாட்டிலும் அமல்படுத்தக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம்மாநில நிர்வாகமும் கார்பரேட் அலுவலகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளது. புதிய டெண்டர் அனுமதி வழங்கும் போது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வரையரைகளை ஏற்படுத்தவும் சட்டப்படியான போனஸ் முதலிய ஷரத்துகள் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். AITUC சங்கத்திற்கு இணைப்புக் கட்டணம் செலுத்த நமது சந்தா மற்றும் அமைப்பை மேலும் வலிமைபெறச் செய்ய வேண்டும்AITUC சங்கம் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டத்தில் நாம் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கடமையை நினைவூட்டினார்.
பொருளாளர் விஜய் ஆரோக்கியராஜ் இந்தத் தீர்ப்பு ஒருவரியில் முடிந்து விடக்கூடிய பிரச்சனை அல்லஇதன் நியாயத்தை பிரச்சார இயக்கமாக தோழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  கான்டிராக் ஊழியர்களின் பணிநிலமை எப்படி இருக்கிறது என்பதற்கு பஞ்சாபில் ஹொண்டாய் நிறுவனம் ஒரு எடுத்துக்காட்டு. கடும் புயலின் போது அந்த நிறுவனம் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என நிர்பந்தித்ததுமனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைதான் இந்திய முதலாளிகளின் குணமாகும்.
பின்னர் வேலூர், ஈரோடு, புதுவை, சேலம், குடந்தை, தஞ்சை , தருமபுரி, தூத்துக்குடி, கோவை ,கடலூர்  முதலிய மாவட்டங்களிலிருந்து தோழர்கள் சுருக்கமாக தங்கள் அனுபவங்களை எதிர்பார்ப்புகளைக் கூறினர்தூத்துக்குடி தோழர் பேசும் போது புதிய ஒப்பந்தக்காரர் வந்தபோது சம்பளம் 170 லிருந்து 120 ஆக குறைக்கப்பட்ட பிரச்சனையில் உடன் தலையிட்டு மீண்டும் ரூபாய் 170 பழையபடி மாற்றியமைத்ததைக் குறிப்பிட்டார்.
தேனீர் இடைவேளையின்போது அனைவரையும் அரங்கத்தில் அமர வைத்த குடந்தைத் தோழர்களின் நிஜ நாடகம் அனைவருக்கும் அரசியல் தெளிவை ஏற்படுத்துவதாகச் சிறப்பாக  நடைபெற்றது, (அது பற்றிய குறிப்பு தனியே)

பின்னர் அனைவரும் ஆவலுடன் கேட்கக் காத்திருந்த ஏஐடியுசி மாநிலத்தலைவர் தோழர் K. சுப்புராயன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் எழுச்சிமிக்க ஆற்றொழுக்காக அமைந்த உரை. AITUC மாநிலத் தலைவர் தமது உரையில்:
நாம் கையில் எடுத்துள்ள வேலை எளிய வேலை அல்ல. தீர்ப்பின் ஆழ அகலங்களைப் பரிசீலிக்க கருத்தரங்கில் கூடியுள்ளோம். TMTCLU சங்கம்  AITUC உடன் இணைந்தது. எனவே இது AITUC அமைப்பின் கருத்தரங்கம் ஆகும் பாட்னாவில் நடந்த AITUC சங்கத்தின் ஜெனரல் கவுன்சிலில் இந்தத் தீர்ப்பு குறித்து விவாதித்தோம்பல மாநிலங்களில் பல துறைகளில் உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நடத்த வேண்டிய கருத்தரங்கம். எனவே இது ஒரு தொடக்க முயற்சி. பாராட்டுகள்.  தமிழ் மாநில கவுன்சில் 15 நாட்கள் முன்பு திருச்சியில் நடத்த இருந்த மாநில அளவிலான விரிந்த கருத்தரங்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சற்று முன் நம்முன்னே ஒப்பனை இல்லாமல் நடத்தப்பட்ட நாடகம் நாட்டில் ஒப்பனையில் மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட அரசியலைத் தோலுரித்ததுதீர்ப்புக்குப் பின் மத்திய மாநில அரசுகள் வாய் திறக்கவே இல்லைநெய்வேலி நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் சரிபாதி ஒப்பந்தத் தொழிலாளர்கள்அவர்களின் பலரின் வாழ்வு ஒப்பந்தத் தொழிலாளியாகவே முடிந்துபோகிறதுஅரசு நம்மை உபயோகித்து தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரத்தில் இருக்கிறது. இதனை மாற்ற வேண்டுமானால் குருட்டடியாக அல்ல, நாம் குறிபார்த்து அடிக்க வேண்டும்.
நியாயஸ்தர்கள், நீதிமான்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிறார்கள். தீர்ப்பை வணங்கி ஏற்று மத்திய மாநில அரசுகள் குறைந்தபட்சம் தங்கள் பொதுத்துறை அரசு நிறுவனங்களில் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அரசு நழுவுகிறது.
என்எல்சியில் 12 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் செய்யும் அதே பணியை ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறைந்த கூலியில் செய்கிறார்கள்இதுமனித கண்ணியத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதல் என்கிறது தீர்ப்பு. ஆனால் இருளான சூழ்நிலையே நிலவுகிறதுபோராடும் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதுஅரசியல் சட்டம் வழங்கிய அந்த உரிமைமக்களின் கருத்துரிமைஒரு இன்ஸ்பெக்டர் மட்டத்திலான அதிகாரியால் தீர்மானிக்கப்படுகிறது, நாம் எங்கே எவ்வளவு நேரம் ஆர்பாட்டம் / போராட்டம் நடத்ததலாம் என்பதைதமிழ்நாடு எங்குமே மக்கள் கூடும் இடத்தில் போராட்டம் நடத்த ஆள்வோரின் தவறை அம்பலப்படுத்த முடிவதில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், நீதித்துறை / நிர்வாகத் துறையினரின் மண்டையில் புதிய பொருளாதார நண்டு பிராண்டுகிறதுபோராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் / சட்டங்கள் திருத்தப்படுகின்றது. ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் அமைக்கலாம் என்பது போய் 40 பேருக்குக் கீழே பணியாற்றினால் ஒரு நிறுவனத்தில் தொழிற் தகராறு சட்டப்படி பிரச்சனை எழுப்ப முடியாது என திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று வேலை முடிந்தால் கிழித்தெறியப்படும் காகிதமாக வாழ்க்கை மாறி உள்ளதுஇதற்கெல்லாம் அடிப்படை உலகமயம், தனியார் மயம், தாராளமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கைகளேஇவற்றை முடிவு செய்பவர்களாக உலக வர்த்தக் கழகம் (WTO)., உலக வங்கி, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ள்னஇவை ஆட்டி வைத்தபடி அரசுகள் ஆடுகின்றன. மக்களின் சுகாதாரம் மற்றும் கல்விக்கு மானியம் வழங்கக் கூடாது அதை குறைக்க வேண்டும் அதை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் நிதி மூலதன அதிகாரம் அப்பட்டமாகஇவற்றைநம்மீது திணிக்கிறதுஇவற்றின் மீது நமது தாக்குதல் குவிக்கப்பட வேண்டும.

தீர்ப்பை அரசு செயல்படுத்தாது / செய்யாது. ஆனால் செய்ய வைக்கும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு. அதற்கு நாம் ஒன்றுபட வேண்டும். உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுக்க நம்மை சாதி மத இனமாகப் பிரித்து மோதவிடும் போக்கு கொடிகட்டிப் பறக்கிறது. இது தொழிலாளி வர்க்கத்தைப் பலவீனப்படுத்துகிறதுசாதியால் அரசியல் அதிகாரத்தில் உயர்பவர்களை நாம் புரிந்து கொள்ள வர்க்க உணர்வு கூர்மைப்படுத்தப்பட வேண்டும்இதனைத் தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டும்.
விடுதலைக்கான விருப்பம் மட்டும் வெற்றியைத் தந்து விடாதுபொருத்தமான கருவியை --ஒற்றுமை ஆயுதத்தைகையில் எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாம் உற்றுப் பார்த்தாலே அரசு இற்றுப்போய் விழும்தனிப்பட்ட தலைவர்களை நம்பி நாம் வழுக்கி விழுந்தது போதும்கூட்டு பலம் பெருக வேண்டும். அதற்கு வர்க்க ஒற்றுமையைக் கட்ட வேண்டும்AITUC பத்தோடு பதினொன்றாக சந்தாவில் வயிறு பிழைக்கும் இயக்கம் அல்ல. அக்னியில் பிறந்த அவதாரம் AITUC. 1920 ல் பிறந்த இயக்கத்திற்கு இன்னும் மூன்றாண்டுகளில் 100 ஆண்டு. அதில் இணைந்தவர்கள் நீங்கள். தாய்க் கோழியாய் AITUC உங்களைக் காப்பாற்றும்ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் என்பதை மோடி அரசு 30 சதவீதம் இருந்தால்தான் அங்கீகாரம் என மாற்றியுள்ளது. சிட்டுக்குருவிகள் எல்லாம் வல்லூரை எதிர்க்கும் வல்லாண்மையைப் பெற்றுவிடக் கூடாது என்பதால்தான்ஆனால் சட்டரீதியான நமது எல்லா உரிமைகளையும் பெறாமல் நாம் ஓயமாட்டோம்அற்பமானதுதான் தேங்காய் நார். ஆனால் அவற்றை சேர்த்து முறையாக முறுக்கேற்றினால் ஓடாத திருவாரூர் தேரையும்  கட்டியிழுக்கும் வடகயிறாகும், AITUC ன் கருத்தரங்கிற்கு வாருங்கள்சந்திப்போம் வாழ்த்துகள் நன்றி
அடுத்து நம்முடைய முன்னாள் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி தகவல் பெட்டகமாக பல்வேறு தீர்ப்புகளை முன்வைத்து நிறைவுரையாற்றினார் (அடுத்து தோழர் பட்டாபி , தோழர் NKS உரை  பின்னர் தனியே,)  

     













No comments:

Post a Comment