Thursday, January 12, 2017

நிஜ நாடகம்
உண்மையில் ஒரு நிஜம் நாடகமானது
          இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ்இயல் என்பது இயல்பான பேச்சு, எழுத்து; இசைராகத்தோடு இனிமையாகப் பாடப்படுவது அல்லது கருவிகளில் இசைக்கப்படுவது; நாடகம் என்பதோ பேச்சு நடை உரையாடலையும் சில போழ்து, பாட்டு நாட்டிய அபிநயங்கள்  எல்லாம் இணைந்து மக்களை வெகுவாகக் கவரக்கூடிய கலை வடிவம்.

          நாடகத்தின் செய்தி மக்களின் மனதில் ஆழமாகப் பதியும். அதன் வீச்சுக்கு உதாரணம் ஒரு அரிச்சந்திரா நாடகம் அல்லது கூத்தைப் பார்த்த பிறகு சாதாரண மோகன் தாஸ் கரம் சந்த் இன்று வரை உலகம் அதிசயத்துப் பார்த்து வியக்கும் மகாத்மா காந்தி ஆனது.

          தேர்ந்த ஒப்பனைகள், காட்சி சிலைகள், உணர்ச்சி மிக்க வசனம் இவற்றோடு காண்பவர்களின் கண் எதிரே நடித்துக் காட்டப்படுவதுஅதன் இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த வடிவமே நவீன சினிமாஆனால் சினிமா பார்க்க நாம் தியேட்டருக்குச் செல்ல வேண்டும்செலவும் அதிகம்.

          அதனால்தான் நாம் இருக்கும் இடத்திலேயேமக்கள் கூடும் தெருக்களிலே குறைந்த ஒப்பனைகளோடு அல்லது ஒப்பனை ஏதுமின்றி நடித்துக் காட்டப்படுவதுதான் நிஜ நாடகம் / தெரு நாடகம். பலமணி நேரம் விவாதித்து, பேசி, பிரசங்கம் செய்து புரிய வைக்க வேண்டிய விஷயம் ஒரு சிறு காட்சி அமைப்பில் நடித்துக் காட்டப்படும் போது மிகத் தெளிவாக விளங்கும், மனதில் படியும்.

          அத்தகைய ஒரு சிறப்பான முயற்சிதான் குடந்தைத் தோழர்கள் நமது கருத்தரங்கில் நடத்திய நிஜ நாடகம்—“ நியூ டெல்லி சலூன்.”  முதலில் நாடகத்தின் மையக் கரு என்ன என்பதைப் பார்ப்போம்

நாடகக் கதைக் களம்

        நம் நாட்டில் படிக்காதவர்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக உள்ளதுஆனால் அவர்கள் நாட்டு நடப்பு தெரியாதவர்கள் அல்லர். அந்த நடைமுறை ஞானம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?   அது வெளிப்படும் இடம் மக்கள் கூடும் டீ கடை, காத்திருந்து முடிவெட்டிக்கொள்ள நேரும் சலூன் எனும் முடி திருத்து நிலையங்கள்

        நம்முடைய நிஜ நாடகத்தின் களம் ஒரு சலூன்ஒரு வகையில் ஹைடெக் சலூன்முடி திருத்தும் கலைஞர் ஏப்ரன் எனும் மேலங்கி அணிந்த ஒரு இளைஞர்கடையின் பெயர்நியூ டெல்லி சலூன்’. அநேகமாக கடை ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும். கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். நாடகம் துவங்குகிறது.

        சலூனுக்கு வந்தவர் கடையின் வாடிக்கையாளரான ஒரு BSNL அதிகாரிநம்கண்களும் அவரோடு உள்ளே நுழைகிறதுசலூனில் அந்தக் கடைக்கே உரிய சுழலும் நாற்காலி. ஆனால் வித்தியாசமாக பல தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளனகாரல் மார்க்ஸ், பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் மற்றும் தோழர் ஜீவா.

        அதுவே காணும் நம்மை சற்று நிமிர்ந்து உட்காரச் செய்கிறதுபார்வையாளர்களின் கவனத்தை மேலும் கவரும் வகையில் எடுப்பான குரலில் ஒரு நாட்டுப் பாடல்கடந்த 50 நாட்களுக்கும் மேல் மக்கள் படும் பாட்டைவங்கிகளில், ஏடிஎம் க்கு முன்னால் வரிசையில் 500 / 1000 / புதிய 2000 நோட்டுகளால் படும் அவதியை பாட்டு விவரித்து நாடகக் கருவின் பின்புலத்தை இசையால் நிறைக்கிறது.

 நாடகம்

       வாடிக்கையாளரான BSNL அதிகாரி சுழல் நாற்காலியில் வந்து அமர, கடை ஊழியர் பரபரப்பாகிறார்கருவிகளை சரியாக எடுத்து வைக்கிறார். உரையாடல் ஆரம்பிக்கிறது.

        அதிகாரி, பிரதமர் மோடியின் நவம்பர் 8 செல்லாத நோட்டு நடவடிக்கையைப் பாராட்டி இந்தியா எப்படி மாறப்போகிறது பாருங்கள் என நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளின் பிரதிநிதியாகப் பேசுகிறார்முடிவெட்டும் தொழில் நுட்பக் கலைஞரான இணைஞர் அவரிடம் நாட்டு நடப்பை எதார்த்தமாக நக்கல் நையாண்டியுடன் புட்டு புட்டு வைக்கிறார்.

        வாட்ஸ் அப், முகநூல்களில் படாதபாடுபடும் பண மதிப்பிழக்கப்பட்ட நடவடிக்கை நகைச்சுவைகள் குடந்தைத் தோழர்கள் மூலம் நேரில் கேட்டபோது அரங்கில் எழுந்த கைதட்டல்கள்…..  அப்பப்பா….. அற்புதம் ….அனாயாசம்.

        மோடி அரசின் மக்கள் விரோத, தேச பக்தி முகமூடி அணிந்த, கார்பரேட்டுகளின் நலன்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பதான  டி-மானிடைசேஷன் குளறுபடிகளை பேச்சாளர்கள் எவ்வளவுதான் புள்ளி விபரங்களோடு விளக்கினாலும், அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எழுந்த அரசியல் கட்சிப் பேச்சு என ஒதுக்கிவிடக் கூடும்சாதாரண மனிதனின் குரலாக ஒலிக்கும் போது நெஞ்சில் தைக்கிறது, உண்மை புரிகிறது.

        “BSNL நிறுவனத்தின் அதிகாரி நீங்கஉங்க பையன், பொண்ணு, மருமக, வூட்டுகார அம்மா எல்லோரும் ஒவ்வொரு பேங்கில அப்படின்னு சொல்றீங்க….. வாழ்க்கையில நல்லா செட்டிலாயிட்டீங்க சார்“ – இது முடிவெட்டும் இளைஞர்

        மோடியை முதலில் புகழ்ந்த அதிகாரி சொல்கிறார்நீங்க வேற. . . கடுப்பேத்தாதீங்க தம்பிஅவங்க ஒவ்வொத்தரும் ஒவ்வொரு பேங்க் ஏடிஎம் வரிசையில நீக்குறாங்க

        கை தட்டலுக்குக் கேட்க வேண்டுமா?

        இடையே செல்பேசி ஒலிக்கிறதுகடைக்காரர் தன் மனைவியிடம் அக்கறையாகப் பேசுசிறார்.  “ தண்ணி பாட்டில் எடுத்துகிட்டியா? பிளாஸ்கில டீ, பிஸ்கெட் பாக்கெட்டிபனு, குடை எல்லாம் எடுத்துகிட்டியா?...
        “ ஏன் தம்பி, வொய்ஃப் வெளியூர் போறாங்களா?“ பாராட்டும் குரலில் அதிகாரி

        “ ஏடிஎம் வரிசையில நிக்கப் போறா சார். எப்போ வருவாளோ? என்னைக்குத்  திரும்புவாளோ?“ அலுப்பாக இளைஞர்.

        அரங்கம் அதிர்ந்தது கைதட்டில்.

        பேச்சின் இடையே அதிகாரி தனது நிறுவனத்தின் நல்ல அம்பாசிட்டராக செயல்படுவதை மறக்கவில்லைஅவர் சொன்னார்

        “  தம்பி! நான் ரொம்பப் பெருமைப்படறேன் தம்பி, BSNL நிறுவனத்திலே வேலை பார்க்குறேன்கிறத்துலஉங்க ஊர்தானேபுயலின் போது, சென்னை மழை வெள்ளத்திலே தொலைபேசி சேவைய நிறுத்தாம கொடுத்தது எங்க நிறுவனம் மட்டும்தான் தம்பி

        எடக்கு மடக்கா இளைஞர் ஒரு கேள்விய தூக்கிப் போட்டார் : “ உங்க BSNL விளம்பரத்துல பிரதமர் மோடிய காணோம் ஆனா தனியார் கம்பெனி JIO விளம்பரத்தில வெறும் 500 ரூபாய்க்கு மாடலா இருந்தார்ல, ஏன் சார்?“

        அதிகாரி ஏன் அங்கே நிற்குறார், ஆபிசுக்கு லேட்டாயிடுச்சு அப்படின்னு முடி வெட்டிக்காமலேயே போய்ட்டார்.

        பாவம். நம்ப கடைக்காரர்இன்னும் காத்திருக்கிறார்.  2000 ரூபாய் ஏடிஎம் கிடைச்சு. . . அதுக்கு சில்லரையும் கிடைச்சு . . . யாரு கடைக்கு வரப் போகிறார் என்று.

பாராட்டுகள்

        நமக்கு மகிழ்ச்சி, நல்லதொரு நிஜ நாடகத்தை நமது ஊரில் நமது கருத்தரங்கில் அரங்கேற்றினோம் என்று.

        கருத்தரங்கில் பேச்சாளர்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்திகருத்து விலகல் இல்லாமல்பேசினார்கள்ஆனால், இந்தப் பிரச்சனைகளை எல்லாம் பாதிக்கக் கூடிய அடிப்படையான அரசியலை, கலை உணர்வோடு குறைந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம் புரிய வைத்தது.

        தோழர் கே. சுப்புராயன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) பாராட்டியதை விட நாம் என்ன பாராட்டஎடுத்த எடுப்பில் ஏஐடியுசி மாநிலத் தலைவர்  சொன்னார் : ‘சற்று முன் ஒப்பனை இல்லாமல் நடித்தவர்கள், இன்று ஆட்சியில்/அரசியலில் ஒப்பனையோடு நடிப்பதைத் தோலுரித்துக் காட்டினார்கள்

        சென்னையில் நமது சங்க மாநாட்டில் தோழர் குப்தா குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறதுசமூக ஒற்றுமையை வலியுறுத்தி குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடந்த பிறகு தோழர் குப்தா கூறினார் : “ குழந்தைகள் நம்மைவிட அதிகம் அறிந்திருக்கிறார்கள் (The children knew better than us.)


        வாழ்த்துகள் தோழர்களே! உங்கள் கலைப் பணி தொடரட்டும் !

No comments:

Post a Comment