.

Tuesday, March 14, 2017

திருநெல்வேலி  TMTCLU மாவட்ட மாநாடு
தோழர்களே,
        வணக்கம்  திருநெல்வேலியில்  நமது TMTCLU  சங்கத்தின்  மாவட்ட மாநாடு தோழர் பரமசிவம் அவர்களின் தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டனர். துவக்கவுரையாக நமது TMTCLU மாநில பொருளாளரும் குடந்தை மாவட்டத்தின் மாவட்ட செயலருமான தோழர் M.விஜய்  உரையின் போது இந்த சங்கம் தோழர் ஜெகன் தலைமை வகித்த சங்கம் என குறிப்பிட்டிருந்தார்.. வாழ்த்துரையாக தோழர் தூத்துக்குடி பாலு அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மற்றும் NFTE- முன்னாள் தலைவர் தோழர் அருணாசலம் அவர்களும், சண்முகவேல் மாவட்ட உதவிச் செயலர்-NFTE/TVL  , பச்சையப்பன் மாவட்ட உதவித் தலைவர் NFTE/TVL   வாழ்த்துரை வழங்கினார்கள்.

        சிறப்புரையாக தோழர் ப.காமராஜ் மாநில தலைவர் NFTE அவர்கள்  TMTCLU  சங்கத்திற்கு எப்போதும் தமிழ் மாநில சங்கம் துணை நிற்கும் என்று தமது உரையில் குறிப்பிட்டார். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார். நிரைவுறையாக நமது  மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  அவர்கள் நிர்வாகிகளை வாழ்த்தி நமது TMTCLU சங்கம்  பல்வேறு சாதனைகளை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு செய்து கொண்டிருக்கிறது என்றும் இன்னும் பல்வேறு சாதனைகளை செய்யவும் தொடர் முயற்சி எடுத்து வருகிறது என்றும், NFTE தலைமை பல முறை மாநில நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தைக்கு  செல்லும் போதெல்லம் நமது TMTCLU  நிர்வாகிகளை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அதில் தீர்வும் கண்டுள்ளது என்று பெருமைபட கூறினார்.
 இறுதியாக  தோழர் P.பழனிவேல் மாவட்ட உதவிச் செயலர் NFTE/TVL அவர்கள்  நன்றியுரை கூறினார். கஷ்டப்படும் அடிமட்ட தொழிலாளர்களுக்காக தோழர் ஜெகன், தோழர் தமிழ்மணி ஆகியோர்   வளர்த்த TMTCLU  சங்கத்தினை திருநெல்வேலியில் துவக்க  அரும்பாடு பட்ட உன்னத தோழர் P.பழனிவேல் அவர்களை  TMTCLU  தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி NFTE என்றும் துணை நிற்கும்....
மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
தலைவர்                                : P.பழனிவேல் TT
உதவி தலைவர்                     : S.சுரேஷ்
செயலர்                               : M.ராஜ்குமார் STR
உதவிச் செயலர்கள்               : P.சேகர்
                                           : S.குமார்
                                           : S. மணியம்மாள்
பொருளாளர்                      : A.பால்ராஜ்
செயற்குழு உறுப்பினர்கள்     : V. செல்வம்
                                        : ராமகிருஷ்னன்
                                           : B.காந்திமதி
                                           : V. நித்யா
                                           : P.ரமேஷ்குமார்
                                           : P.காந்திமதி

                                           : K.பட்டுக்குமார்





No comments:

Post a Comment