.

Saturday, April 1, 2017

சிறிய பணி, சீரிய பங்கு

ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு என்ற அனைத்து சங்கங்களின் அறைகூவல்படி நமது மாவட்டத்தில் நாம் மேற்கொண்ட மேளாக்கள் முதல் கட்டமாக நிறைவு பெற்றுள்ளன.
நிறைவளிக்கும் பணியாக இதனை நாம் கருதுகின்றோம்பாலம் கட்டுவது என்ற பெரும்பணியில் ஓர் அணில் பங்கேற்றதைப் போல.
இடையே நமது அனுபவங்களை -- நமது எதிர்பார்ப்புகளை -- எதிர்கொண்ட சவால்களை உள்ளடக்கி (உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ) என்றவொரு அறிக்கையை வெளியிட்டோம்.
மாவட்டப் பொதுமேலாளர் அதனை வரவேற்றார் என்பதில் மகிழ்ச்சி உண்டு என்றாலும் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மாற்றமின்றி சுணக்கமாகவே இருந்தது என்பது ஒரு துரதிருஷ்டமே.
தேவையான சிம்கார்டுகளைப் பெறுவதற்கு பல நேரங்களில் சிரமமாக இருந்தது.
தேவையான சிம்கார்டுகளைப் பெற நாம் போராட வேண்டியிருந்தது.
EKYC (Electronic Know Your Customer) இயந்திரம் (ஆதார் கைரேகை ஊடுருவு கருவி) தேவை என நாம் தாமதமாகக் கோரிக்கை வைத்தபின்னும் வழங்குவதில் ஆர்வமற்ற போக்கு மட்டுமல்ல, பாரபட்சமான போக்கும் கூட இருந்ததுஅது பின்னர் தான் நமக்கு தெரிய வந்தது, அங்கீகாரம் பெற்ற மற்றொரு சங்கத்திற்கு முன்பே வழங்கப்பட்டதும், நிர்வாகத்திடம் கருவிகள் கைவசம் இருந்ததும். நாம் கோரியபின் தாமதமாக வழங்கியது என்பதெல்லாம்.
        இதற்கெல்லாம் நோக்கம் இருந்ததாக நாம் நினைக்க விரும்பவில்லைசென்ற அறிக்கையில் கூட குறிப்பிட்டிருந்தோம், கோட்டப் பொறியாளர் திரு. . சிவக்குமரன் தவிர வேறு அதிகாரிகள் வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்று. அதன் பிறகும் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லைஇப்போதும் இதைக் குறிப்பிடக் காரணம் அப்படி வந்திருந்தால் தேவைகளை அவர்களே உணர்ந்து சரிசெய்திருப்பார்களே என்ற ஆதங்கம் மட்டுமே.
        மற்றொரு காரணம் கோவைப் பகுதியில் அதிகாரிகள் பங்கேற்றது மட்டுமில்லை, மேளா பந்தலுக்கு இணைய வசதி செய்து தரப்பட்டு ஆக்டிவேஷன் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டு வருகிறது என்ற உற்சாகமான செய்தியும்தான்.
        இதனால்தான் நாம் கருவிகள் கேட்டோம்கொடுத்த பிறகு கடைசி இரண்டு நாட்களில் நம்மாலும் எண்பதுக்கு மேற்பட்ட படிவங்களை நம்முடைய செல்பேசியைக் கொண்டு உடனடியாக செய்து முடிக்க முடிந்திருக்கிறதுகருவியை கையிருப்பில் வைத்துக் கொண்டே ஏன் நாம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கேள்வி.
                      அருவினை என்ப உளவோ கருவியான்
              காலம் அறிந்து செயின்
என்பது வள்ளுவம்.
சென்ற அறிக்கையில் நாம் மகிழ்ச்சியாக குறிப்பிட்டோம், மேளா விற்பனைக்கு பிறகு உடனடியாக ஆக்டிவேஷன் செய்யப்படுகிறது என்று. அதனைச் செய்தது அலுவலகத்திலிருந்தே எப்போதும் போல கூடுதல் பணியாற்றிவரும் நமது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களே.       மாறாக ஒரு நிலையில் ஆக்டிவேஷனில் தாமதம் ஏற்பட்ட போது  உதவுவதற்கு சில மாற்று ஏற்பாடுகளைத் தெரிவித்தோம். (அப்படித் தாமதமானால்  மறுநாள் அதே இடத்தில் மேளா போடுவதில் நிறைய இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி வந்தது,) அதையே நமது CSC ஊழியர்களிடம் NFTE புகார் செய்வதாக அதிகாரி கூறினார் என்றால் அது மித்ரபேதம் செய்யும் முயற்சி அன்றி வேறென்னநாம் வேறேதும் பதில் சொல்ல விரும்பவில்லை, அதிகாரிகள் இன்னும் பெருந்தன்மையாக பொதுத்துறை கலாச்சாரத்திற்குகூட்டு சிந்தனை, கூட்டு உழைப்பு, கூட்டு முயற்சி என்பதற்குமாற வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமேஇதனால் உங்கள் அதிகார அந்தஸ்துக்கு ஒருபோதும் குந்தகம் வராது.
இதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் காரணம் எங்களுடைய தோழர்கள் தோழியர்கள் சங்கத்தை தவறாக நினைத்துவிடக் கூடாது, அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் இயல்பானஇனியவார்த்தைகளின் உண்மையை உணராது போய்விடக் கூடாது என்பதற்காகவும் தான்.
இவற்றை எல்லாம் தவறான புரிதல்களை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக அன்றி இவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்ட காயம்மாறா வடுஎன்று சொல்லிக்காட்ட அல்ல.
சேர்ந்தே நாம் பயணிப்போம்!
நமக்குமுன் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்!
வெல்வோம்! முன்னேறுவோம்! நிறுவனம் காப்போம்!
அனைத்து கிளைகளிலும் இந்த மக்கள் பேரியக்கத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் நமது பாராட்டுதல்களும் நன்றியும்!
நமது இந்த மகத்தான பணியினை பாராட்டிய AGM CSC அவர்களுக்கு நமது நன்றி.
இக்குழுவினை வெற்றிகரமாக வழிநடத்திய தோழர்கள் E.வினாயகமூர்த்தி, இராஜேந்திரன் மற்றும் பங்கேற்ற நமது தோழர்களுக்கும் நமது நன்றிகள் பல... மற்றும் FNTO மாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன், AIBSNLPWA தோழர்கள் P.ஜெயராமன், N.திருஞானம் ஆகியோருக்கும் நமது நன்றிகள்.
இன்னும் பணிகள் காத்திருக்கு!

No comments:

Post a Comment