.

Sunday, April 2, 2017

கள்ளக்குறிச்சி தோழர் K.பாண்டியன் பணி ஓய்வு
அன்பானவர், மிகவும் அமைதியான குணம். நிறைகுடம் தளும்பாது என்பார்களே அத்தகைய அமைதி. ஆனால் கொண்ட கொள்கையில் உறுதி. கல்லை பகுதி NFTEசங்க செம்பதாகை உயர்த்திய காணரும் வீரர்.அவரது பனி ஒய்வு 30.3.2017-ல் கல்லை மூத்த தோழர் P.அழகிரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பாராட்டிற்குரிய விழா ஏற்பாடுகள். தோழர் K.செல்லமுத்து மிக அற்புதமாக வரவேற்புரையை அனைவரும் மகிழும் வண்ணம் நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக வளர்ந்து வரும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C.பாலகுமார் விழா சிறப்புரை ஆற்றினார். நாம் எதிர்கொள்ள உள்ள 2017 ஊதிய மாற்றத்தை மையமாக வைத்து, நாம் முன்பு சந்தித்த சம்பள குழுக்களின் அனுபவங்களோடு ஒப்பிட்டு சிறப்பாக உரையாற்றினார்.
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தனது உரையில் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு ஒரு பிரிண்டர் தேவை என்ற வேண்டுகோளை முன்வைத்தார். உடனடியாக தோழர் பாண்டியன் எழுந்து பிரிண்டருக்கான முழுத்தொகையையும் தானே அளிப்பதாக கூறி அதற்குரிய தொகை ரூ.13,500யை மாவட்ட செயலரிடம் அனைவரின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே ரொக்கமாக வழங்கினார்.
தோழருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

மாவட்ட சங்க அலுவலகத்தில் புதிய கலர் பிரிண்டர் 

தோழர் வழங்கிய தொகையில் நேற்று (1.4.2017) புதிய கலர் பிரிண்டர் வாங்கப்பட்டது. மாவட்ட சங்க அலுவலகத்தில் AIBSNLPWA மூத்தத் தோழர் P.ஜெயராமன் அவர்கள் தனது கரங்களால் புதிய பிரிண்டரின் முதல் பிரதியை எடுத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.  






No comments:

Post a Comment