GPF-க்கான...! புதிய செயல்முறை...!
அமுலாக்கம்..........!
தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில்... பணிபுரியும்...
BSNL ஊழியர்களுக்கு..., இனிமேல்., GPF.........., (பொது வைப்பு நிதி).,
நேரடியாக தொலைத்தொடர்பு துறை (DOT)., CCA மூலமாகத்
தான்..., (முன்பணம் (Advance) மற்றும் திரும்பபெறுதல்
(Withdrawal).,) பட்டுவாடா செய்யப்படும் என...,
மாநில... நிர்வாகம் 29-05-2017 அன்று...!
உத்திரவிட்டுள்ளது.
இந்த உத்திரவின் படி:
GPF... இனி ஓவ்வொரு மாதமும் மூன்று முறை (4-ஆம் தேதி, 12-ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதி என்ற அடிப்படையில்...) பட்டுவாடா செய்யப்படும்.BSNL நிறுவனத்திடமிருந்து., GPF விண்ணப்பித்த ஊழியர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்ற 5 வேலை நாட்களுக்குள் பட்டுவாடா செய்யப்படும்.GPF-க்கான தொகை., ஊழியர்களின் சம்பள வங்கிக் கணக்கில் தொலைத்தொடர்பு துறை (DOT)., தமிழ்நாடு வட்ட CCA மூலம் நேரடியாக செலுத்தப்படும். அந்தந்த... மாவட்ட கணக்கு அதிகாரி (DDO)., ஒப்புதல் (Approval) வழங்கிய உடன்... கீழ்க்கண்ட அட்டவணைப்படி... பட்டுவாடா... நடைபெறும்.
பிரதி மாதம் 4-ஆம் தேதி : (முந்தைய மாதம் 25-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு)
பிரதி மாதம் 12-ஆம் தேதி : (நடப்பு மாதம் 7-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு)
பிரதி மாதம் 20-ஆம் தேதி : (நடப்பு மாதம் 16-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு)
ஒவ்வொரு ஊழியருக்கும்., அவர்களுடைய தொலைத்தொடர்பு துறை (DOT)., பதிவேட்டு கணக்கில் உள்ள GPF தொகையை பொறுத்து பட்டுவாடா செய்யப்படும்.
சிறப்பு ஏற்பாடாக..., 27-05-2017 வரை விண்ணப்பித்து., ஒப்புதல் வழங்கப்பட்ட... அனைத்து ஊழியர்களுக்கும்., 2017 ஜூன் முதல் வாரத்தில் பட்டுவாடா செய்யப்படும்.
No comments:
Post a Comment