ஞானத்
தந்தை மறைந்தார்.
. .
தபால்
தந்தித் தொழிலாளர்களுக்கு ஞானப்பால் அளித்து வந்த
மார்க்ஸியப் பேரொளி
தோழர் டி.ஞானையா இன்று(8.7.2017) காலை
நமக்காகச் சிந்திப்பதை
நிறுத்திக் கொண்டார்.
கண்மூடிய இன்றைய காலை வரையிலும் வற்றாது பேசியும் எழுதியும் நிறைவாழ்வு வாழ்ந்த நம் தலைவரின் வயது 97.
§ பழைமைப் பிடிப்புள்ள கிருஸ்துவ குடும்பத்தில் பிறந்து பள்ளிப் பருவம் கல்லூரிக் காலம் தொடங்கி ஒரு போராட்டக்காரராகத் தம் வாழ்வைத் துவக்கியவர்.
§ மதுரை மையத்தில் போஸ்டல் சர்வீஸ் தேர்வு எழுதிய 2000 பேர்களில் தேர்வு பெற்ற நால்வரில் ஒருவர். அந்தக் காலத்தில் அரசுத் துறைகளிலேயே அஞ்சல் துறையில்தான் ஊதியம் அதிகம். ஆனாலும் சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்த இவரைத் தேடிப் பிடித்து நியமன உத்தரவை தரும்படியாயிற்று இவரது தந்தைக்கு.
§ 1941
அக்டோபரில் கரூரில் அஞ்சலகப் பணியில் சேர்ந்தார். ஞானத் தந்தையின் தந்தைக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்கள். அஞ்சல் துறையில் செஞ்சூரியன் உதித்தது.
§ 1941
இறுதியில் ஓர் நல்ல அதிகாரியின் வழிகாட்டுதலில் இராணுவ போஸ்டல் சர்வீஸில் சேர்ந்து பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றார்.
§ 1946
இறுதியில் மீண்டும் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்தார்.
§ 1952
சிதம்பரம் மாநில மாநாட்டில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
§ 1954
முதல் 1960
வரை ஐந்து முறை நிர்வாகத்தால் மாற்றல் செய்யப்பட்டு குடும்பத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாயினர்.
§ 1960
வேலை நிறுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். கோர்ட்டு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்
நிர்வாக நடவடிக்கையாக வேலை நீக்கம் செய்யப்பட்டார். 14 மாத வேலை நீக்கத்திற்குப் பிறகு மற்றவர்கள் போலவே இவரும் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
§ 1965
பிப்ரவரியில் NFPTE சம்மேளனத்தின் செகரட்டரி ஜெனரலாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
§ இவ்வளவு ஆண்டுகாலம் களத்தில் இயக்கத்தைப் பலமாகக் கட்டிய பிறகு பெரும்பான்மை ஊழியர்களின் ஆதரவோடு ஒரு இடதுசாரித் தலைவராக முதல் முதலில் இப்பதவியை ஏற்றார்.
§ 1970
வரையான இவரது காலத்தில் JCM கூட்டு ஆலோசனைக் குழு, 1968 வேலைநிறுத்தம், சர்வதேச உறவுகளில் பிணைப்பு முதலியன குறிப்படத்தகுந்தவை.
சம்மேளனப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு தொடர்ந்து தொய்வின்றி தோழர்களை இயக்கத்தின்பால், இடதுசாரி கம்யூனிஸ தத்துவங்களின்பால் ஈர்த்து பேசியும் பல கட்டுரைகள் புத்தகங்கள் எழுதியும் ஓயாது உழைத்து வந்தார். 1993 ல் இவரது துணைவியார் மறைந்தது இவருக்குப் பெரிய இழப்பாக அமைந்தது.
டேனியல் ஞானையா பொன்ராஜ் என்ற இயற் பெயர் கொண்ட நமது ஞானத் தலைவரின் நிறை வாழ்வைப் பயில்வோம்!
என்றென்றும் நமது நினைவில், ஞானச் சுடர் பரப்பும் அவரது நூல்களில் அவர் வாழ்வார்!
மறைந்த பெரும் தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கமும் அஞ்சலியையும் செலுத்துவோம்!
நீடு வாழ்க ஞானையா புகழ்!
தோழர் ஞானையாவுடன்.........
தலைவரின் இறுதி சடங்கு
வியாழன் (13.7.2017) அல்லது வெள்ளி (14.7.2017)
கிழமைகளில் நடைபெறும்
கிழமைகளில் நடைபெறும்
தோழர் ஞானையாவுடன்.........
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் கலந்துகொண்டு வரும்பொழுது கோவையில் NFPTE-ன் முன்னாள் அகில இந்திய பொதுசெயலரும், முதுபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் ஞானையா அவர்களை அவரது இல்லத்தில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உள்ளிட்ட கடலூர் தோழர்கள் சந்தித்து ஆசிபெற்றனர்.
No comments:
Post a Comment