திண்டிவனம் BSNL சேவை வளர்ச்சி கூட்டம்
14-07-2017 அன்று திண்டிவனத்திலுள்ள தொலைபேசி நிலையத்தில் BSNL சேவை மற்றும் வளர்ச்சி கூட்டம் தோழர் G.ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துவக்கவுரையாக
மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம்
உரையாற்றினார், அப்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
பெறுவதற்கும், 30 நாட்கள் சம்பளம் பெறவும்
நாம் வழக்காடு மன்றம் சென்றுள்ளோம் மற்றும் பணித்தன்மைக்கேற்ப ஊதியம் கிடைத்திட நாம்
மாநில நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம் வெகு விரைவில் கிடைத்திட மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்து
வருகிறது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் தமது வாழ்த்துரையில் நமது இலாக்கா வளர்ச்சிக்காக நமது ஊழியர்களும் ,
ஒப்பந்த ஊழியர்களும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும். நமது TMTCLU அமைப்பினை பலப்படுத்திட அனைவரும் பாடுபட
வேண்டும் என்று பதிவு செய்தார்.
நிறைவாக மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மூன்றாவது ஊதியக் குழு அமைத்திட வலியுறுத்தி நாம்
கடுமையான எதிர்ப்பினை கடந்த ஜூலை 03,04
ஆகிய தேதிகளில் உண்ணானோன்பு இருந்ததின்
விளைவாக இன்று ஒரு படி முன்னேற்றம் அடைந்துள்ளோம் , அதுவும் உங்களின் ஒத்துழைபோடு நடைபெற்றது, நமது நிறுவனத்தின் இலாக்கா வளர்ச்சிக்காக நமது தோழர்களின் ஒத்துழைப்போடு மாதமொருமுறை மேளா நடத்திட
வேண்டும் என்றார். ஊதியக்குழு
நல்லவிதமாக அமைந்திட வேண்டும் என்றால் நமது
இலாகாவை லாபரகமான நிறுவனமாக மாற்றிட நாம் அனைவரும் சேர்ந்து அயராது
பாடுபட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையில் என்றும் NFTE மாவட்டச் சங்கம் துணை நிற்கும் என்று கருத்தினை பதிவு செய்தார்.
60 மேற்பட்ட நிரந்திர , ஒப்பந்த ஊழியர்கள் கூட்டத்தில்
கலந்து கொண்டனர். சிறப்பான ஏற்பாடு செய்த திண்டிவனம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
தோழர் A.முருகன் CL/TNV, தோழர் Y.ஹாரூன் பாஷா JE/TNV, V. நரேஷ் CL/TNV திண்டிவனம் TMTCLU கிளைச்சங்கத்தின் தலைவர் , செயலர் , பொருளராக ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டனர். மூன்று தோழர்கள் உள்பட TMTCLU நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள் ...
No comments:
Post a Comment