தோழர் ஞானையா
தலைவர்கள்
இறுதி அஞ்சலி
13.7.2107 அன்று மறைந்த தோழர் ஞானையா அவர்களின் கோவை இல்லத்தில்
தோழரின் உடலுக்கு . நமது தலைவர்கள் தோழர் ஆர்.கே, தோழர் பட்டாபி, தோழர் SSG, தோழர் P.காமராஜ், தோழர் K.நடராஜன், தோழர்
G.ஜெயராமன், தோழர் குடந்தை ஜெயபால்,
தோழர் V.லோகனாதன், தோழர்
R.செல்வம், தோழர் இரா.ஸ்ரீதர்,
மற்றும் தோழர்கள் முருகேசன், குன்னூர் ரங்கன்,
தர்மபுரி மணி, தஞ்சை நாடிமுத்து மற்றும் மாநிலம் முழுவதுமிருந்து பல
தோழர்கள் கலந்துகொண்டு மறைந்த தோழருக்கு மலர்
வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தோழர் ஞானையா அவர்களின் உடல் கோவை இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற தோழர்
ஞானையா அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தில் தோழர்
ஆர்.கே, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தோழர் து.இராஜா, தோழர் இரா.முத்தரசன், தோழர் P.R.நடராஜன் CPM மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தோழருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர். தோழர் K.சுப்புராயன் AITUC, தோழர் C.மகேந்திரன் CPI ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
மாநில உதவி செயலர் தோழர் இராபர்ட், தோழர் ஞானையா அவர்களின் இறுதி சடங்குகளை முன்னின்று செய்தார்.
No comments:
Post a Comment