போராட்ட வாழ்த்துக்கள்...
மூன்றாவது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU
உள்ளிட்ட மத்திய சங்கங்கள் இணைந்து இன்று நடத்திட்ட
உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்த அந்த தலமட்டங்களில் உள்ள தலைவர்கள், தோழர்கள்
கலந்து கொண்டு வாழ்த்துரைத்தனர்.
கோவையில் தோழர் பட்டாபி, மாநில செயலர் தோழர் K.நடராஜன், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி
பேசினர். அகில இந்திய செயலர் தோழர்
S.கோபாலகிருஷ்ணன், மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ், மாநிலத் துணைத்தலைவர் தோழர்
V.லோகநாதன், மாநில அமைப்பு செயலர் தோழர் இராபர்ட், நமது மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் ஆகியோர் உடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடலூரில் நடைபெற்ற நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட உதவி செயலர் தோழர் D.குழந்தைநாதன் ஆகியோர்
கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
No comments:
Post a Comment