.

Sunday, August 6, 2017


புத்தக வெளியீடு..
தோழர் ஆர்.கே அவர்களின் தொழிற்சங்க பணியினைப்பாரட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் நமது கடலூர் மாவட்டத்தில் தோழர் சிரில் அறக்கட்டளை சார்பில் 18-ஆம் ஆண்டு தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ”வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றிய உரையைத் தொகுத்து கடலூர் தொழிற்சங்க இதழ் தொலைபேசித் தோழன் சார்பில் நூல் வெளியிடப்பட்டது. அந்நூலை தோழர் தா.பாண்டியன் அவர்கள் வெளியிட தோழர் ஆர்.கே பெற்றுக்கொண்டார்.


அவ்வமயம் தோழர் பட்டாபி அவர்கள்  கடலூரில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழாவில் கலந்து ஆற்றிய சிறப்புரையையும், TMTCLU சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் சமவேலைக்கு சம ஊதியம் பற்றிய உரையையும், பொதுத்துறை ஊதியம் பற்றி நியூஏஜ் ஆங்கில பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment