TMTCLU விழுப்புரம் கிளையின் மூன்றாவது மாநாடு
13.8.2017 காலை விழுப்புரம் தொலைபேசி நிலைய வாயிலில் புதியதாக
அமைக்கப்பட்டிருந்த சங்கக் கொடிக்கம்பத்தில் கொடி யேற்றத்துடன் துவங்கியது. மாநில
உதவிசெயலர் தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் தோழர் MS.குமார்
கொடியேற்றிட, மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு விண்ணதிரும் கோஷமிட்டார். NFTE
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உரையாற்றினார்.
பின்னர் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள மாவட்ட AITUC
அலுவலகத்தில் மாநாடு துவங்கியது. தோழர்
AS.சுப்பிரமணியன் தலைமையில் தோழர் S.நடராஜன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும்
வரவேற்றார். தோழர் S.சண்முகம் அஞ்சலி உரையாற்றினார்.
TMTCLU மாநிலப் பொருளாளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர்
விஜய்ஆரோக்கியராஜ் துவக்க உரையாற்றினார். ( முழு உரை பின்னர்)
No comments:
Post a Comment