போராட்ட விளக்கக் கூட்டம்
தோழர்களே!
நாளை (13.09.2017) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தோம். அதனடிப்படையில் இன்று துணைப்பொதுமேலாளர்
(நிர்வாகம்) அவர்கள் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தையில் மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர், மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட உதவிச்செயலர் தோழர்
D.குழந்தைநாதன் கலந்துகொண்டனர். நிர்வாகத்திடம் சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற பேச்சு
வார்த்தையில் சில முன்னேற்றம் காணப்பட்டது. அதனடிப்படையில் நாளை நாம் விடுத்த
ஆர்ப்பாட்டத்தை போராட்ட விளக்கக்கூட்டமாக அனைத்துக் கிளைகளிலும் நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
பேச்சுவார்த்தை விவரங்களை மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் V.இளங்கோவன், தோழர் D.குழந்தைநாதன் ஆகியோரை
தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment