டவர்
கார்ப்பரேசன் எதிர்த்து
கண்டன
ஆர்ப்பாட்டம் -15.9.2017
நாடு
முழுவதுமுள்ள 65,000 க்கும் மேற்பட்ட
BSNLக்கு உரிமையான செல்
கோபுரங்களை அதை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் மத்தியில் ஆளும் மோடி அரசு BSNL டவர்களை இணைத்து
தனி நிறுவனம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனை
கண்டிக்கும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை அழிக்கவும், தனியார்
நிறுவனத்தை ஆதரிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து 15.09.2017 கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம்
முழுவதும் உள்ள கிளைகளில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது சங்கத்தின்
சார்பில் மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன்
கண்டன உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள், தோழர்கள், ஒப்பந்த
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment