.

Monday, September 4, 2017

கண்ணீர் அஞ்சலி...!
தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்டம், மகேந்திரமங்கலம் கிராமம் அருகே., 02.09.2017 அன்று மாலை நடைபெற்ற சாலை விபத்தில்., இளம் தோழர். ஜீவா, Junior Engineer., மற்றும் தோழர். கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும்., அந்த வாகனத்தில் சென்ற நான்கு தோழர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.நேரடி நியமனத்தில், சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட தோழர். ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர். கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு கடலூர் NFTE-TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.
தோழர்களை பிரிந்து வாடும்., அவர்களின் குடும்பத்தாருக்கும்., நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
    NFTE-TMTCLU
மாவட்டச் சங்கங்கள்,
        கடலூர்.


தோழர்களின் கவனத்திற்கு

ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரியும் போது  இது போன்ற  எதிர்பாரத அசம்பாவிதங்களால் பல   ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்கள் கடுமையான கஷ்டப்படுகின்றன.  மற்றும் பொருளாதார சிக்கலில் சிக்கி அல்லல்படுகின்றனர். இதனை  ஓரளவுக்கு சரி செய்ய  சம்மந்தப்பட்ட ஒப்பந்த ஊழியரின் பெயரில் ESI,EPF, கட்டப்பட்டிருந்தால் உடணடியாக  ESI,EPF மற்றும் ஒப்பந்தகாரரிடம் தகவல் கொடுக்கப்பட வேண்டும். அப்படி ESI அலுவலகத்தில் தகவல் கொடுத்து விட்டு பின்னர் தேவையான ஆதாரங்கள், ஆவணங்கள்(DOCUMENTS) சமர்பித்தால் இறந்த ஊழியரின் ஈமச் சடங்கிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை ESI அலுவலகத்திலிருந்து பெறலாம்.  வேலையில் இருக்கும்  போது ஒப்பந்த ஊழியர் இறந்துவிட்டால் தகுந்த ஆதாரங்களை ஒப்பந்தகாரரரிடம் மூலம் ESI  அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அந்த நிகழ்வு உண்மை என்று நிரூபணமனால்  இறந்த ஊழியரின் குடும்பத்திற்ல் உள்ள தாய்/தந்தை, அல்லது மனைவி/மகன்கள்,மகள்கள் எத்தனை பேரோ அனைவருக்கும் இறந்த ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளம் எவ்வளவோ அதனை  அனைவருக்கும்  பென்ஷனாக பிரித்து கொடுப்பார்கள். அதே போல EPF அலுவலகத்திலும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். ஆகவே  நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF,ESI முறையாக  கட்டப்பட்டு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். 
    


No comments:

Post a Comment