.

722436

Wednesday, September 27, 2017


தோழர் P.சென்னகேசவன்
பணிநிறைவு வாழ்த்துக்கள்

தமிழகத்தின் பெரும்பான்மையான தோழர்களின் அன்பிற்கும், நெருக்கத்திற்கும் உரியவரான வேலூர் தோழர் சென்னகேசவன் JTO செப்டம்பர் 30 பணிஓய்வு பெறுகிறார். அனைவருடனும் உரிமையோடும் வெளிப்படையாக பழகுகின்ற தோழர் சென்னக்கேசவன்.
இலாக்காவில் மஸ்தூராக நுழைந்து NFTE இயக்கம் போராடிப் பெற்று தந்த பதவி உயர்வுகளை தனது விடாமுயற்சியின் மூலம், பல்வேறு இலாக்கா பதவி உயர்வுகளை முழுமையாகப் பெற்று தற்போது JTOவாக பணி ஓய்வு பெறுகிறார். இவரது சாதனை அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
இலாக்காவினில் பெற்ற பல்வேறு உயர்வுகளைப்போல் தொழிற்சங்கத்திலும் நிரந்தர ஊழியராக நுழைந்த ஆண்டிலேயே கோட்டச் சங்க மாநாட்டில் லைன்ஸ்டாப் சங்க அமைப்புசெயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, கோட்டசங்கத்தில் பல பொறுப்புகளை பெற்று பணிஓய்வின் போது மாநில சங்க துணைத்தலைவராக பதவியில் தொடர்கிறார்.
   நமது மாவட்டத்தில்   நடைபெற்ற  பல்வேறு     நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு    தனது     முழுமையான               தொழிற்சங்க செயல்பாட்டினை வெளிப்படுத்தினார். தோழர் சென்னகேசவனின் தொழிற்சங்கப் பணியும், சமூகப்பணியும் முன்னிலும்  முனைப்பாக தொடரவும்,     பணி     ஓய்வுக்காலம்     நலமோடும், வளமோடும் பயனுள்ளதாக அமைந்திட கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பாக தோழர் சென்னகேசவனைப் பாராட்டி வாழ்த்துகிறோம்,


No comments:

Post a Comment