NFTE-BSNL,
TMTCLU மாநிலச்சங்க
அறைக்கூவலுக்கிணங்க ஒப்பந்த ஊழியர்களின் 5அம்ச கோரிகைகளை வலியுறுத்தி 4.10.2017 மாலை மாபெரும் தர்ணா போராட்டம் TMTCLU மாவட்டத்தலைவர்
தோழர் M.S.குமார் தலைமையில் மிகச்
சிறப்பாக நடைபெற்றது. TMTCLU கடலூர்
கிளைச்செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜ் துவக்கவுரையாற்றினார். மூத்தத்தோழரும், TMTCLU மாநில இணைப் பொதுச்செயலருமான தோழர் சு.தமிழ்மணி NFTE மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், NFTE மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர்
தோழர் V.இளங்கோவன், மாவட்ட உதவிசெயலர் தோழர் G.B.சுதாகர்ராஜ், PEWA
மாவட்டச்செயலர்
தோழர் V.நல்லதம்பி. கள்ளக்குறிச்சி NFTE கிளைச்செயலர் தோழர் S.மணி, NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் ஆகியோர் தங்களது கண்டன
உரையினை பதிவு செய்தார்கள். சிறப்புரையாக நமது சிறப்பு விருந்தினர் தர்மபுரி NFTE மாவட்ட செயலரும்,
தர்மபுரி AITUC
மாவட்ட
செயலருமான தோழர் K.மணி NFTE-TMTCLU சங்கத்தின் இன்று (04-10-2017) நடைபெறும்
மாபெரும் தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. நிச்சயம் இந்த நியாயமான கோரிக்கை வென்றெடுப்போம் அதில்
உறுதியாக இருங்கள். என்று கூறி, மற்ற தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் சிறுதும் அக்கறை இல்லாமல் செயல்படுவார்கள். ஆனால் தொழிலாளர்கள் மீது மிகவும் அக்கறையோடு
செயல்படும் ஒரே சங்கம் NFTE,TMTCLU சங்கங்கள் தான் என்பதனை நீங்கள் அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது இயக்கத்தினை பலமான
அமைப்பாக மாற்றிட நாம் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும். நமக்காக AITUC சங்கம்
BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் NFTE மத்திய சங்கங்களின் அறைகூவலை ஏற்று வரும்
நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் தர்ணா
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. நிச்சயம் அந்த போராட்டம் வெற்றி
பெற்றால் தொழிலாளர்களின் ஊதிய மாற்றம் மிக கனிசமாக உயர்வடையும் என்பதனை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமில்லாமல் TMTCLU மாநிலச் சங்கம் சமவேலைக்கு சம ஊதியம் பெற்று
தருவதற்கு சென்னை உயர் நீதிமன்றதில்
வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் நமது அமைப்பை பலம் உள்ளதாக மாற்றிடுவோம் நன்றி.
இறுதியாக நமது NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் “நமது கோரிக்கையின் மீது தீர்வு
வரவில்லையென்றால் அடுத்தபடியாக நாம் நமது
பொது மேலாளர் அலுவகத்தையும், தொழிலாளர் நல ஆணையத்தையும் முற்றுகை செய்யவும் தயாராக இருக்க வேண்டும், TMTCLU
சங்கம் மற்ற ஒப்பந்த ஊழியர் சங்கங்ளைப்போல் மாலையில் கூடிக்கலையும் கூட்டமல்ல, மற்றவர்களைப்போல் ஒப்பந்த ஊழியர்களின்
பணத்தை சுரண்டி கூட்டம் நடத்துபவர்கள் அல்ல, ஒப்பந்த ஊழியர்களை பலிகொடுத்து
வீட்டுக்கு அனுப்புபவர்களல்ல” என்று தனது நிறைவுரையில் தனது கண்டனத்தை பதிவு
செய்தார்.
மாற்று சங்கத்திலிருந்து
TMTCLU சங்க செயல்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்டு இணைந்த தோழர்களுக்கு தோழர்
தமிழ்மணி, தோழர் மணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
பின்னர் TMTCLU மாவட்ட அமைப்பு
செயலர் தோழர் மணிகண்டன் நன்றியுரையாற்றினார்.
தர்ணாவில் கலந்துகொண்ட அனைவருக்கும்
கடலூர் தோழர் V.ராஜி JE-OFC அவர்கள் இரவு உணவு
விருந்தளித்தார். தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
No comments:
Post a Comment