.

Sunday, November 26, 2017

வரலாற்றில் இன்று ( 26.11.1949)
 இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம்.
           
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான் 1950 ஜனவரி 26ம் நாள்!. எண்ணற்ற ஜாதிகள், சமயங்கள், மொழிப்பிரிவு மக்கள் வாழும் இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கவேண்டிய பிரம்மாண்டமான பணியை சிறப்பாக செய்து முடித்த அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான அந்த குழுவின் மகத்தான, திறம்பட்ட பணியினை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

     சட்டத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்களே, அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் உங்களுக்குப் பிடித்த ஷரத்து எது? என்ற கேள்வி அம்பேத்கார் முன் வைக்கப்பட்டதுஅவர் என்ன சொன்னார்?
(ஷரத்து) Art.17  பிடிக்கும் என்றா? Art.15 / 4  பிடிக்கும் என்றா? Art.16 / 4  பிடிக்கும் என்றா?
Art.17  அது உயிர் வாழும் உரிமைஅதில்தான் திண்டாமை எதிர்ப்பு / திண்டாமை குற்றம் என்பது இருக்கு.
Art.15 / 4 இட ஒதுக்கீடு பற்றியது
Art.16 / 4  கல்வி உரிமை வேலை உரிமை பற்றியது (அது குறித்து உச்சநீதி மன்றத்திலும் இன்று விவாதங்கள் நடக்கின்றன)
ஆனால் அம்பேத்கார் கூறினார் எனக்குப் பிடித்த ஷரத்து Art.32. அந்த Art.32 தான் எல்லோருக்குமான Constitutional remedy சட்டபூர்வமான தீர்வுகளைத் தருகிறது
அரசு / நீதி மன்றம் / சாதாரணமான குடிமகன் / சாதாரண தோழன் / பணக்காரன் / ஏழை/ ஒடுக்கப்பட்டவன் / மேல் ஜாதி என்று அழைத்துக் கொள்பவன் / என்னைக் கீழ் ஜாதி என்று அழைப்பவன் அல்லது என்று சொல்பவன் ஆயினும் சரி அனைவருக்கும் சட்டத்திற்குட்பட்டு பிரச்சனை எழுப்பவும் அது குறித்தான தீர்வுகளைப் பெறவும் வழிவகை செய்கிறதுஅரசியல் சட்டரீதியான மருந்துகளைத் தருகிறதுவேதனைகளுக்குப் பதிலைத் தருகிறது. தீர்வைத் தருகிறது.
எனவே அரசியல் சட்டம் வாழட்டும் !

No comments:

Post a Comment