.

Monday, December 4, 2017

BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு.
வேலை நிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டம்.


மூன்றாவது ஊதியத்தை அமுல்படுத்தகோரியும், இரண்டாவது ஊதியக்குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மற்றும் BSNL ஐ நலிவடைய செய்யும் துணை டவர் நிறுவனம் துவங்குவதை கண்டித்தும் வருகின்ற டிசம்பர் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தவுள்ளோம். அதனடிப்படையில் 04.12.2017 காலை 09:00 மணிக்கு சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற கோரிக்கை விளக்கக்கூட்டத்தில் தோழர்கள் K.T.சம்பந்தம் BSNLEU மாவட்ட செயலர், V.இளங்கோவன் NFTE மாநிலசங்க  சிறப்புஅழைப்பாளர், A.நடராஜன் SNEA,
S.
ஆனந்த் மாவட்ட செயலர்  AIBSNLEA, N.மனோகர் PEWA ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். திரளாக தோழர்கள், தோழியர்கள் மற்றும் அதிகாரிகள்  முழுமையாக கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.

No comments:

Post a Comment