திண்டிவனம் கிளை சிறப்புக்கூட்டம் -28.11.2017
திண்டிவனம் கிளை சார்பில் 28.11.2017 மதிய உணவு இடைவேளையில்
சிறப்புக்கூட்டம் தோழர் V.குப்பன் தலைமயில் நடைபெற்றது. தோழர்கள் Y.ஹாரூன்பாஷா,
தோழர் முருகன் முன்னிலை வகிக்க, தோழர் G.கணேசமூர்த்தி
வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் இன்றைய நமது நிறுவனத்தின்
வளர்ச்சியைப் பற்றியும், அதில் நமது ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றியும் சிறப்பாக
உரையாற்றினார். TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார். கூட்ட நிகழ்வுகளை தோழர் G.ஜெயச்சந்தர் தொகுத்து வழங்கினார். கிளைச்செயலர் தோழர் M.செல்வகுமார் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். திண்டிவனம்
தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment