.

Tuesday, January 23, 2018

தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம்,கடலூர்

தோழர்களே!
        கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில் விழுப்புரத்தில் 21.01.2018 அன்று நடைப்பெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   TMTCLU சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து  நமது மாநிலத் தலைவர் தோழர் ஆர் கே நமது சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
        துவக்கவுரையாக தோழர் நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   தனது பாணியில் சங்கத்தின் செயல்பாட்டினைப் பற்றியும் நிதி சம்மந்தமான பிரச்சனைகளையும் எடுத்துக் கூறினார். கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என  தமது உரையில் பதிவு செய்தார்.
         மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் நமது சங்கத்தின் அமைப்பு நிலையினை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.  அடுத்து  தோழர் R.அகஸ்ட்டீன் விழுப்புரம், தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் கடலூர், Y.ஹாரூன் பாஷா கிளைச் செயலர் TNV,  தோழர் E.C கண்ணன் கிளைச் செயலர் கள்ளக்குறிச்சி, தோழர் D.ரவிச்சந்திரன் கிளைச் செயலர்/CDM, தோழர் A.பாஸ்கரன் கிளைத் தலைவர்/ULD, தோழர் M.மணிகண்டன் மாவட்ட அமைப்பு செயலர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
        அதனைத் தொடர்ந்து  தோழர் ஆ.சவுரிராஜன் மாவட்டப் பொதுச் செயலர் AITUC, K.முருகன்  மாநிலத் தலைவர் அரசு பணியாளர் சங்கம், K.மோகன் மாவட்டச் செயலர், வங்கி ஊழியர் சங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். NFTE மாநில உதவிச் செயலர் தோழர் G.S.முரளிதரன் இன்றைய சூழலில் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். அதற்கு நாம் உறுதியான எடுக்க வேண்டும். ஆட்குறைப்பை தவிர்க்க நாம் நேர்த்தியான முறையில் நிர்வாகத்திடம் அணுக வேண்டும் என்றார்.
        AITUCயின் அகில இந்தியச் செயலர் தோழியர் வஹிதா நிஜாம்  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையை கண்டு AITUC பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டு வருகிறது . AITUC  சங்கம்  உங்களின் தாய்ச் சங்கம். உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும், நீங்கள் துவக்கப் போகும் அகில இந்திய அமைப்பிற்கு நிச்சயம் எங்களின் ஆதரவு உண்டு என பலத்த கரவொலிக்கிடையே உரையில் பதிவு செய்தார்.
        அடுத்தப்படியாக நமது மாநில தலைவர் தோழர் ஆர் கே  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் செயல்படும் நிர்வாகத்தினை கண்டித்துப்  பேசினார். தொழிலாளர்களை அனுப்பும் போக்கினை நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிடில் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்றார். தொழிலாளர்களை யாரும் கில்லுகீரை அல்ல, அவனும் மனிதனே!, அவர்களும் மதிக்கப்பட வேண்டும் என்றார். அது மட்டுமில்லாது நமது அமைப்பை இன்னும் பலப்படுத்திட அகில இந்திய அமைப்பினை உருவாக்கிட தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் என்றும் அதுவும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்றவுடன் ஒப்பந்த ஊழியர்களின் மத்தியில் மகிழ்ச்சி பொங்க அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பினர்.
         நமது தொழிற்சங்கச் தலைவர் தோழர் K.சேது அவர்கள் கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். அடுத்தப்படியாக TMTCLU சங்கத்தின் பிதாமகனும்  மாநில துணைப் பொதுச் செயலாளருமான தோழர் S.தமிழ்மணி அவர்கள் நமது தோழர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். NFTE மாநில தலைவர் P.காமராஜ் தனக்கே உரிய பாணியில் நிர்வாகத்தின்  அணுகுமுறை எப்படி இருக்கிறது அதனை எவ்வாறு அணுகிச் செயல்பட வேண்டும் என்று பதிவு செய்தார்.
        NFTE  மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன்  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு நமது இந்த இரண்டு சங்கங்களும் இணைந்து பல்வேறு செயல்களை தொழிலாளர்களுக்குச் செய்து கொண்டு வருகிறது.  ஆட்குறைப்பினை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்றும் நாம் இன்னும் செய்ய வேண்டிய செயல்பாடுகள் ஏராளம். இந்த கடலூர் மாவட்டச் சங்கம் நல்ல எடுத்துகாட்டாக செயலபடுகிற மாவட்டச் சங்கம் என்றும் . அதனினும் NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றேன்  எனத் தமது சிறப்புரையில் பதிவு செய்தார்.
        TMTCLU மாநிலப் பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  நமது மாநிலச்  சங்கத்திற்கு உறுதுணையாக கடலூர் மாவட்டச் சங்கம் விளங்குகிறது. இன்னும் நாம் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு  மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
        இறுதியாக NFTE யின் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  மிக அதிகளவில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. புதிய தலைமையினை உருவாக்கி , அந்த தலைமை இன்னும் துடிப்புமிக்க செயல்பாட்டோடு செயலாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு  புதிய நிர்வாகளை அறிமுக செய்தார். புதிய நிர்வாகிகளை தோழர் S. நடராஜன் முன்மொழிய தோழர் A.சுப்ரமனியன் வழிமொழிந்தார்.
        மாவட்ட மாநாட்டிற்கு தோழர் மனோகர் திருச்சி, அவருடன் சண்முகம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கும், தோழர் M.விஸ்வநாதன் மாவட்டச் செயலர் ,தோழர் M.பாரதிதாசன்  உள்ளிட்ட அனைத்து தருமபுரி தோழர்களுக்கும் , தோழர் R.ராஜேஷ் மாவட்டச் செயலர் குடந்தை , அவரோடு வந்திருந்த அனைத்து குடந்தை தோழர்களுக்கும் , வேலூர் மாவட்ட பொருப்பாளர் தோழர் M.ராஜ்குமார் மற்றும் அவரோட   வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், விருது நகரில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், சேலத்திலிருந்து வந்திருந்த மாவட்ட பொருப்பாளர் தோழர் இசையரசன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்,  தஞ்சை தோழர்களுக்கும்,  புதுவையிலிருந்து வந்திருந்த மாவட்ட செயலர் நாகலிங்கம் உள்ளிட்ட அனைத்து புதுவை தோழர்களுக்கும், திருச்சியிலிருந்து வந்திருந்த தோழர் சன்முகம், தமிழ்செல்வம் உள்ளிட்ட தோழர்களுக்கும்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலர் A.S குருபிரசாத் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது.
         நிறைவான தோழர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக  காலை உணவு , தேனீர், மதியம் உணவு , தேனீர் வழங்கி  மாநாடு சிறப்பிக்க  அரும்பாடுபட்டு  உழைத்த  தோழர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்...

தோழமையுடன்
  M.S.குமார்                    J.கந்தன்                     A.S.குருபிரசாத்
   மாவட்ட தலைவர்                                மாவட்ட பொருளாளர்                                     மாவட்ட செயலர்










No comments:

Post a Comment