இயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம்
(டெலிகாம்
இதழ் தலையங்கம்)
சத்தியாகிரகம் காந்திய
போராட்டத்தின் ஒரு
வடிவம் என
அனைவரும் அறிவோம். அது ஒத்துழையாமையையும், சிவில்
சட்ட மறுப்பையும்
உடன் அழைத்து
வரும். அந்தப் புதிய ஆயுதத்தை
முதலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்திய
காந்தி, இந்தியாவில் அதனை இன்னும்
ஆழமாகச் சோதித்துச்
சுதந்திரத்தைச் சாதிக்க,
லட்சம் லட்சமாய்
மக்களை இயக்கத்தின்
பால் ஈர்த்தார்.
இந்தவகைப் போராட்டம்
ஒருவரை வீரஉணர்ச்சி
பெற வைக்கிறது. எதற்கு வீரம்? எதிரியை வெட்டி
வீழ்த்த அல்ல,
உண்மையை ஓங்கி
ஒலித்து, கோரிக்கையின் சத்தியத்தை நிலைநாட்ட; சர்வபரித் தியாகத்திற்கும், எத்தகைய
இன்னல்களையும் தாமே
மனமுவர்ந்து ஏற்கும்
நெஞ்சுரத்தைப் பெறுவதற்கு;
சத்தியாகிரகிகளின் ஒரே
நம்பிக்கை, தங்களின் சத்தியாகிரகம், தங்கள்
கோரிக்கையின் நியாயம்
வென்றே தீரும்
என்பதுதான்.
சத்தியாகிரகத்தின் நோக்கம்
சத்தியத்தை, உண்மையை
நிலைநாட்டுவதுதான்.
நம்முடைய பிரச்சனையைப்
பொருத்தவரை சத்தியம்
என்பது, BSNL நிறுவனத்தின் நட்டத்திற்குக் காரணம்,
நிச்சயமாக ஈடுபாட்டோடு
உழைக்கும் இரண்டு
லட்சம் ஊழியர்கள்
அல்ல என்பதை
உரக்க உலகத்திற்குச்
சொல்வதுதான்.
நட்டத்திற்குக் காரணம்,
அரசின் கொள்கைகள்; நட்டத்திற்குக் காரணம், பொதுச் சொத்துக்களின் முதலீட்டில்
முதலாளிகளின் கழுத்தறுக்கும் போட்டி மூலம் வாரிச்சுருட்டும் லாப வேட்டையும், மோசமான
நிர்வாகமும்தான். ஊழியர்களின்
தவறு ஏதுமில்லை;
அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் மாறிவரும் காட்சிகளுக்கேற்ப
–எந்தவித முறையான
பயிற்சியையும் புதிய
தொழில்நுட்பத்தில் தராது
போனாலும்-- எந்தப் பணியையும் ஏற்றுச்
செய்வதற்கு சித்தமாகவே
உள்ளார்கள்.
இந்தச் சூழ்நிலையில்
BSNL--ன் அனைத்துச்
சங்கங்களும், அஸோசியேஷன்களும் தங்களுக்குள் ஆழமாக விவாதித்து,
காந்தி நினைவு
நாளில் சத்தியாகிரகப்
போராட்டத்திற்கும், DOT அலுவலகம் நோக்கிப்
பேரணி இயக்கத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
உடனடியாகத் தீர்வு
காண வேண்டும்
என வற்புறுத்தி
முன் வைத்துள்ள
கோரிக்கைகள்:
ஊதிய மாற்றம்,
அரசின் துணை
டவர் கம்பெனி முடிவைத்
திரும்பப் பெறுதல்,
VRSவிருப்ப
ஓய்வுத் திட்டத்தைக்
கைவிடுதல் மற்றும்
ஓய்வுபெறும் வயதை
58 ஆகக்
குறைக்கும் எந்த
முடிவையும் கைவிடுதல்
என்பதாகும்.
ஊதிய மாற்றம்
ஜனவரி 2017லிருந்து
15
சதவீத ஃபிட்மெண்ட்
பலனுடன் ஊதிய
மாற்றம் என்பது
பல கூடுதல்
அம்சங்களைச் சுட்டிக்
காட்டுவது. BSNL நிர்வாகமோ அதிகாரிகளுக்கான தங்கள்
சிபார்சுகளை DOT–க்கு அனுப்பி
வைத்துள்ளதாக விளக்கம்
கூறுகிறது; ஆனால் அந்தச் சிபார்சுகள்
யாவை, அவை எந்த அம்சங்களின்
அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டன என்பது குறித்து நமக்குத்
தகவல் ஏதும்
இல்லை.
இன்றைக்குள்ள DPE--வழிகாட்டுதல்களின்படி BSNL போர்டுக்கு
அது பற்றி
நடவடிக்கை எடுக்கும்
எந்த அதிகாரமும்
கிடையாது. அந்த DPE--வழிகாட்டுதல்களைப் பரிசீலித்துத் தங்கள் சிபார்சுகளை
வழங்க நடவடிக்கை
எடுக்கும்படி, DOT ஒப்புதல் தந்து, அதனை BSNL--க்கு அனுப்பியுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது.
அப்படியே BSNL சிபார்சுகளில்
எந்தவொன்றையும் ஏற்று
மேல்நடவடிக்கை எடுக்க
குடியரசுத் தலைவரின்
ஒப்புதல் குறிப்பாணையை
வழங்கும் அதிகாரம்
DOT--க்கு இல்லை.
அந்த அதிகாரம்
அமைச்சரவைக்கே உள்ளது. அதுவும் அமைச்சரவையின் முடிவையும்,
அதையொட்டி வெளியிடப்பட்ட
DPE—வழிகாட்டுதல்நெறிகளையும் மீறிச் செயல்பட
முடியுமா?
ஆகவே செய்ய
வேண்டியது என்ன? DOT
அமைச்சரவைக் குறிப்பு
ஒன்றைத் தயாரித்து
இரண்டு அம்சங்களில் BSNL--க்கு விலக்குப்
பெற முயற்சிக்க
வேண்டும். ஒன்று, வரிகட்டுவதற்கு
முந்தைய லாபம் PBT என்பதோடு ஊதிய
மாற்றம் இணைக்கப்பட்டதிலிருந்து விலக்கு
; இரண்டு, 15
சதவீத ஃபிட்மெண்ட்
பலனுடன் கூடிய
ஊதிய மாற்றத்திற்கானச் செலவை வரிகட்டுவதற்கு முந்தைய
லாபம் PBT யின் மேல்
உச்சவரம்பு சதவீதத்துடன்
இணைப்பதிலிருந்து விலக்கு.
அதிகாரிகள் அல்லாத
ஊழியர்களின் (நான்--எக்ஸிகியூடிவ்) 15% கூடிய ஊதியமாற்ற
உடன்பாடு என்பது
பல நடைமுறைகளை
உள்ளடக்கியது.
அதற்கு BSNL நிர்வாகம்
ஊதிய மாற்று
இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைக்க
வேண்டும். அல்லது தற்போது அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையே அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை துவக்க
அனுமதிக்க வேண்டும்.
BSNL அதற்காகத்
தாங்கள் ஏற்கனவே DOT--யை
வேண்டியுள்ளோம் எனச்
சொல்கிறது. அப்படி அந்தக்குழு சங்கங்களுடன்
பேச்சு நடத்தி
உடன்பாடு காண
வேண்டும். புதிய ஊதிய
விகிதங்களை முடிவு
செய்து அதை
15%
பலன்களோடு பொருத்தி
புதிய ஊதிய
நிர்ணயம் செய்யவேண்டும்.
அந்த உடன்பாட்டை
DOT--யின்
ஒப்புதலுக்கு அனுப்பி
தேவையான குடியரசுத்
தலைவர் குறிப்பாணையை
BSNL--க்கு வழங்கிட
வேண்டும்.
துரதிருஷ்டவசமாக, நட்டத்தை
நோக்கி நடக்கும்
எந்த நிறுவனத்தின்
ஊதிய மாற்றமும்,
சம்பந்தப்பட்ட அமைச்சரகத்தினுடைய அந்நிறுவனத்திற்கான மறுபுத்துயிர்ப்புத் திட்டங்களை
வரையறை செய்து,
திட்ட ஒப்புதல்
பெறுதலுடன் முடிச்சுப்
போடப்பட்டிருக்கிறது.
நம்மைப் பொறுத்தவரை
அது DOT
துறையாகும். BSNL-க்கான அத்தகைய திட்டங்கள் எதையும் DOT தயாரித்திருக்கிறதா? அல்லது திட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா
என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால்BRPSC பொதுத்துறை மறுகட்டமைப்பு
போர்டின் விருப்பத்திற்கிணங்க,
நிர்வாகமும்
DOT யும் அந்த முயற்சியில்
இறங்கி டெலாய்டிஇ
ஆலோசனைக் குழுவின் சிபார்சுகள்
பெறப்பட்டுள்ளன
என்று கூறுகிறது.
தனி
துணை டவர்
கம்பெனி
அரசாங்கம் தற்போது முடுக்கி விட்டுள்ள தனி துணை டவர் கம்பெனி நடவடிக்கைகள்,
BSNL நிறுவனத்தின் பொதுமக்கள் உரிமையான கோபுரங்கள் சொத்தின் எதிர்காலம் பற்றி மிகுந்த பல சந்தேகங்களை
எழுப்புகிறது.
IAS அந்தஸ்து உடைய அதிகாரியின்
தலைமையில் தனி துணை டவர் கம்பெனி அமைக்கப்பட்டுள்ளதானது
ஒரு அபாய சமிக்கையே. டவர் கம்பெனிக்கான
நிர்வாக போர்டு BSNL போர்டின் அதிகாரத்தை மீறி தனிச்சையாகச்
செயல்படத் துவங்கிவிடும். IAS அதிகாரியின் தலைமையில் என்னும்போது
நிச்சயம் அது தாய் நிறுவனமான BSNL-–ன் நேரடிக் கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கப்போவதில்லை. கோபுரங்களின் பட்டா உரிமை மட்டும் BSNL-லிடம் முழுமையாக
இருப்பதாகச் சொல்லப்படும்,
ஆனால் பயிர்
வைக்கும் வேளாண்மை
BSNL---ன் விருப்பத்திற்கு இருக்காது. கோட்டு என்னுடையது என
நாம் சொல்லிக்
கொண்டிருக்கலாம், ஆனால்
அதை அணிந்து
கொள்ளும் மாப்பிள்ளை
வேறொருவராக இருப்பார்.
DOT--யும்
BSNL--நிர்வாகமும் இதுபற்றி
எல்லாம் வெளிப்படையாக
இருப்பதில்லை; அங்கீகரிக்கப்பட்டச் சங்கங்கள் அசோஸியேஷன்களுடன் ஆரோக்கியமான
விவாதங்களையும் நடத்துவதில்லை. ஆரோக்கியமற்ற இந்தத் தொழிலுறவுச்
சூழல் நம்மை
மிகவும் கோபமூட்டும்
செயலேயாகும்.
VRS மற்றும் ஓய்வு வயது 58
விருப்ப ஓய்வுத்
திட்டம் மற்றும்
ஓய்வு பெறும்
வயதை 58 ஆகக்
குறைக்கும் பிரச்சனை
MTNL--ஐப் பொருத்தவரைப்
போதுமான அளவு
விவாதங்கள் DOT மட்டத்தில்
நடந்துள்ளன;
அது குறித்து
அறிக்கைகளும்கூட வெளியிடப்
பட்டுள்ளன. ஆனால் BSNL--ஐப் பொருத்தவரை
ஓய்வு பெறும்
வயதை 58 ஆகக்
குறைக்கும் பிரச்சனை
BSNL
நிறுவனத்தின் புத்துயிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியா
அல்லது தனியாக
அந்தப் பிரச்சனை
துவக்கப்பட்டுள்ளதா எனத்
தெரியவில்லை. ஆனால்
DOT--யோ
BSNL—லோ,
அமைச்சரவையின் ஒப்புதல்
பெறாமல், அத்தகைய முடிவெடுக்க முடியாது. குவியலாக நீடிக்கும் இந்தக்
குழப்பங்கள் DOT/BSNL மட்டத்தில் தொடர்ச்சியாக
விவாதித்தால் மட்டுமே
நீங்கும்.
தீர்வுக்கான போராட்டம் சத்தியாகிரகம்
தொழிலாளர்களின் ஒன்றுபட்ட
இயக்கங்களே இவற்றிற்குத்
தீர்வுகாணும் நிச்சயமான
வழிமுறை என்பதை
NFTE பேரியக்கம்
எப்போதும் உணர்ந்து
ஒற்றுமைப் பதாகையை
உயர்த்திப் பிடிக்கும். அதே நேரத்தில் தீர்வை
நோக்கி நகராது
நீடிக்கும் எந்த
இணைந்த போராட்டத்தையும் தொழிலாளர்கள் காலஓட்டத்தில் கண்டுகொள்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளும். DOT--யையும் BSNL நிர்வாகத்தையும் ஆக்கபூர்வமான
பேச்சுவார்த்தை மேஜைக்கு
வரச்செய்வதே இன்றைய
தலையாய கடமை. நமது இயக்கத்தின் மரபார்ந்த
வரலாறு பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தைக்கானப் போராட்டம், பேச்சுவார்த்தில் தீர்வு காண்பது
என்பதே. அதுவே காந்தியின் சத்திய
சோதனையாய் நாம்
சோதித்து வெற்றி
பெற்ற நிச்சயமான
வழிமுறை.
அந்த நெடிய
பாரம்பரித்தின் அறைகூவலே
இன்றைய சத்தியாகிரகப்
போர்முழக்கம். அதன்
பேரொலி ”செய்
அல்லது செத்து
மடி”, ”அமைதிவழிப் போராட்டம் வலிமையானவர்களின் ஆயுதம்”, எல்லாம் காந்தி
மகாத்மா கூறியது.
சத்தியாகிரகத்தின் வெற்றி
பெருந்திரள் பங்கேற்பே!
நாடு நகரமென
நாற்புறமிருந்தும் ஊழியர்களைத்
திரட்டி உற்சாகத்துடன்
பங்குபெறச் செய்வோம்!
தேக்கமுடைத்து முன்னேறுவோம்,
உண்மையை நிலைநாட்டி!
“ சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) புனிதக் கடமையாகிறது,
அரசு ஊழல் மிக்கதாய் அல்லது சட்டத்திற்குப் புறம்பாய்
போகும் போது”
”
மக்கள் கருத்தைத் திரட்டும் ஒரு வழிமுறையே சத்தியாகிரகம்!
அது சமூகத்தின் சகலபகுதியினரையும் ஈர்த்து, கடைசியில்,
(அதிகாரத்தால்) அதனை எதிர்க்க முடியாததாக
எழுச்சி கொள்கிறது ”
”
சத்தியாகிரகி எல்லையற்ற பொறுமைசாலி!
மற்றவர்களின் மீது எல்லையற்ற விசுவாசம் கொண்டவன்!
ஏராளமாய் எதிர்கால நம்பிக்கை உடையவன்”
” இயக்க நடவடிக்கையில் ஈடுபடாமல், நீங்கள்
சென்றடையப் போகும் இடம் எதுவுமில்லை!”
No comments:
Post a Comment