.

Tuesday, February 20, 2018

பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கிளை மாநாடு

               18-02-2018 அன்று சிதம்பரம் கிளையின் ஆறாவது ஆண்டு மாநாடு மற்றும் தோழர் M.மாரியப்பன் TT அவர்களின் பணிஓய்வு விழாவும் தெற்கு சன்னதி இந்து நாடார் திருமண மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு தோழர் K.லட்சுமணன் TT.SSM அவர்கள் பலத்த கோஷங்கள் முழங்க சம்மேளன கொடியை ஏற்ற தோழர்கள் K.நாவு, M.மணிவேல் ஆகியோர் கூட்டு தலைமையில் விழா இனிதே துவங்கியது. வரவேற்புரை தோழர் D.ரவிச்சந்திரன், அஞ்சலியுரை தோழர் A.செல்வகுமார் ஆற்றினார்கள். தோழர் V.லோகநாதன் மாநில துணை தலைவர் துவக்கவுரையாற்றினார்.

                அடுத்த நிகழ்வாக செயல்பாட்டறிக்கை, வரவு செலவு கணக்கு ஆய்வு செய்யபட்டு தோழர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. புதிய நிர்வாகிகளாக தோழர்கள் V.கருணாநிதி JE கிளை தலைவர், V.கிருஷ்ணமூர்த்தி TT கிளை செயலர், S.ரவிச்சந்திரன் JE பொருளர் என முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


            வாழ்த்துரையாக தோழர்கள் A.நடராஜன் SNEA, V.உஷா AIBSNLEA, R.ரவிகுமார்,BSNLEU, K.சீனிவாசன் கிளை தலைவர் G.M அலுவலக கிளை கடலூர், E.விநாயகமூர்த்தி கிளை செயலர் வெளிப்பிரிவு, கடலூர், D.குழந்தைநாதன் மாவ.உ.செயலர் NFTE, திருமதி E.S.கீதா கோட்டப்பொறியாளர், N.மனோகரன் PEWA, திருமதி.ஆனந்தலட்சுமி SDE, H.இஸ்மாயில் மரைக்கார் AIBSNLPWA, இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE ஆகியோரும், சிறப்புரையாக தோழர்கள் P.காமராஜ் மாநில தலைவர் NFTE, R.செல்வம் மாநில பொது செயலர் TMTCLU பேசினார்கள். விழாவின் தொடர்ச்சியாக தோழர் M.மாரியப்பன் TT அவர்களின் பணிஓய்வு விழாவும் கொண்டாடப்பட்டது. கிளையின் சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர் V.கருணாநிதி JE புதிய கிளை தலைவர் நன்றிக்கூற விழா இனிதே நிறைவுற்றது.




No comments:

Post a Comment