.

Monday, March 26, 2018

மாவட்ட செயற்குழு
24-03-2018-   காண்பிரன்ஸ் ஹால், தொலைபேசி நிலையம்,கடலூர்.

மாவட்ட செயற்குழு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு 24-03-2018 சனிக்கிழமை அன்று மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. மாவட்ட  அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் இணைந்த கரங்கள் பொறிக்கப்பட்ட ஒற்றுமையின் சின்னமான புனித சம்மேளன கொடியைஏற்றினார். தோழர் E.விநாயகமூர்த்தி கடலூர் , தொலைபேசியக கிளைச் செயலர்  பொருள் பொதிந்த கோஷம் போட்டார். தோழியர் V.கீதா மாவட்ட துணைத் தலைவர் தமக்கே  உரிய இலக்கிய நயத்தோடு வரவேற்புரை நிகழ்த்தினார்.அகில இந்திய மாநாடு,  3வது ஊதிய ஒப்பந்தம், ஒப்பந்த தொழிலாளர் மேம்பாடு ஆகியவைப் பற்றி சிந்தனையை தூண்டும்  வகையில் மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன்  துவக்கவுரையோடு செயற்குழு துவங்கியது.
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சேவை மேம்பாட்டில் NFTE பங்கு, கிளைசங்க மாநாடுகள் , தமிழ் விழா, மாவட்ட நிர்வாகத்தின் அணுகு முறை, பிரச்சனை தீர்வு, போராட்டங்கள், அடுத்த மாவட்ட மாநாடு ஆகியவை பற்றி அறிமுக உரையில் பதிவு செய்தார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் S.அன்பழகன் தவிர அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும்,, பெண்ணடம் கிளையைத் தவிர அனைத்து கிளைச் செயலர்கள் பங்கேற்றனர். அமைப்பு நிலை விவாதம் சிறப்பாக நடந்தேறியது.
புதிதாக தேர்வு பெற்ற அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள் P.காமராஜ் சம்மேளனச் செயலர், தோழர் A.செம்மல் அமுதன் அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்,  தோழர் V.P மோகன் குமார் மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் பங்கேற்றனர். தோழர் S.பழனியப்பன் அகில இந்திய துணைத்தலைவர் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க இயலவில்லை. அகில இந்திய சங்க நிர்வாகிகளை மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன்  நினைவுகளைச் சொல்லி சிறப்பான பாராட்டுரை வழங்கினார்.
மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் வீ.லோகநாதன் மாநில துணைத் தலைவர், தோழர் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச் செயலர், தோழர் V,இளங்கோவன் மாநில  சங்க சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், தோழர் N.அன்பழகன் உடல் நலக்குறைவால்  பங்கேற்க இயலவில்லை.செயற்குழுவில் மூத்த தோழர் சு.தமிழ்மணி கலந்து பங்கேற்று சிறப்பித்தார். 
தோழர் V.P.மோகன் குமார் அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் ஏற்புரையில் STR அனுபங்களை பகிர்ந்து கொண்டு செயற்குழுவை வாழ்த்தினார். தோழர் A.செம்மல் அமுதன் அகில இந்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தன்னுடைய கோவை மாவட்ட அனுபவங்களைச் சொல்லி , தனது இந்தி மொழிப் புலமையைப் பயன்படுத்தி இயக்கப் பணியை செம்மையாக ஆற்றிடமுடியும் என    தோழர் G. ஜெயராமன் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
        தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலர் இலாகா ஊதிய உடன்பாடு டவர் கார்ப்பரேஷன்  ஆகியன பற்றிய தற்போதைய நிலைமைகளைச் சுருக்க ஏற்புரை நிகழ்த்தினார். 
அமைப்பு நிலையில் அனைத்து கிளைச் செயலர்கள் தங்கள் கிளை பிரச்ச்னைகள் , மற்றும் அமைப்பு நிலை பற்றி கருத்துக்களை எடுத்துரைத்தனர். 
அமைப்பு நிலை விவாதததின் போது தோழர் சிரில் அறக்கட்டளைக்குச் சேர வேண்டிய ரூ 5 லட்சம் வைப்பு நிதி சென்ற மாவட்ட மாநாட்டிற்குப் பிறகு புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைப்பதில் நீடிக்கும் பிரச்சனை குறித்து சில தோழர்கள் பேசினர். அவர்களின் சில வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தோழர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் கோஷமிட்டதால் செயற்குழு சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலச் செயலர் உடனடியாக அவர்களைச் சமாதானப்படுத்த  வெளியே சென்று    பேசினார்.. செயற்குழு சார்பாக தோழர் V. இளங்கோவன்  அவர்களும் பேசினார். அனைவரும் திரும்பிய பிறகு செயற்குழு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
கிளைச் செயலர்களின் கருத்துகளின் மீது பதிலளித்து தொகுப்புரை வழங்கிய மாவட்ட செயலரின் உரை செயற்குழுவில் முத்தாய்ப்பாக அமைந்தது. 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தோழர் G.ரங்கராஜ் மாவட்ட அமைப்புச் செயலர் நன்றி நவிலுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.

சிறப்பு நிகழ்வு

தோழர் K.V.பாலசந்திரன் JE/CDL  அவர்களின் உதவியோடு திரு பாஷா ஆடிட்டர்  மூலம் வரி செலுத்துவது சம்மந்தமாக தோழர்களில் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தது பயனுள்ளதாக இருந்தது.  வருமான வரி நோட்டீஸ் பெற்றவர்கள் 31-03-2018க்குள் வருவாய் வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஆடிட்டர் உதவியாக இருப்பார். செயற்குழு சிறப்பாக நடந்தேற நன்கொடை அளித்துதவிய  மூத்த  தோழர் V. நீலகண்டன், தோழர் N.ராஜாராமன் CDL, தோழர் D.குழந்தை நாதன் மாவட்ட உதவி செயலர்,  தோழர் P.குமார் TT/CDL,  தோழர் M.சுப்ரமணியன் TT/PND ஆகியோருக்கும், மதிய உணவு செலவினை ஏற்றுக் கொண்ட தோழர் V.இளங்கோவன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்   ஆகியோருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் இச் செயற்குழு உரித்தாக்குகிறது. செயற்குழுவின் போராட்ட இயக்கங்களை வெற்றிகரமாக தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

24-03-2018 மாவட்ட செயற்குழு  - தொலைபேசி நிலையம்,கடலூர்




24-3-2018 கடலூரில் நடைபெற்ற 
மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள்

1.      6வது  மாவட்ட மாநாடு
                கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் சிதம்பரம் பகுதியில் நடத்துவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது

          அற்புதமான அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு வெகு சிறப்பாக ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி நிகழ்ந்ததன் பின்பு நமது மாவட்ட மாநாடு நடக்கவிருக்கிறது.

          அகில இந்திய மாநாடு பொற்கோயில் நகரில் நடைபெற்றது போல மாவட்ட மாநாடு பொன்னம்பலனார் திருநடனம் புரியும் பொற்சபை அமைந்த கோயில் நகராம் தில்லை நகரில் நடைபெற உள்ளது.

          மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள சிதம்பரம் கிளையைப் பாராட்டுகிறோம். சிதம்பரம் கிளை, எடுத்தச் செயல்களையெல்லாம் சிறப்புடன் நடத்தும் பாராம்பரிய மிக்க கிளை; துடிப்புமிக்க செயல்வீரர்கள் நிரம்பிய கிளை. மேளாக்கள் நடத்துவதில், புதிய சந்தாதாரர்களை இணைப்பதில், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் என சேவையில் முன்நின்று சாதனை படைத்து மாவட்டச் சங்கத்திற்குத் தொடர்ந்து பெருமைத் தேடித் தரும் கிளைதியாகத் தலைவர் தோழர் D. ரங்கநாதன் அண்ணாச்சி வளர்த்த கிளை.

        சிதம்பரம் கிளை இம்முறையும் மாவட்ட மாநாட்டை நடத்தும் பணியை, மற்றைய தங்கள் பழைய சாதனைகளை விஞ்சும் வகையில், அனைவரும் பாராட்டும் வகையில் செய்து முடிப்பார்கள் என நம்புகிறோம்அந்தக் கிளைக்கு நமது வாழ்த்துகள்அது மட்டுமல்ல, அனைத்துக் கிளைத் தோழர்களும் அவர்கள் பணிக்குத் துணை நிற்க வேண்டும் என இச்செயற்குழு அனைவரையும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.

          நமது உறுப்பினர்கள் அனைவரையும் சார்பாளர்களாக ஏற்றுக்கொள்வது என இம்மாவட்டச்சங்கச் செயற்குழு தீர்மானிக்கிறது நன்கொடை கட்டணம் ரூபாய் 300.= என ஒருமனதாக இம்மாவட்டச் செயற்குழு நிர்ணயிக்கிறது.

          மாநாட்டிற்கு ஒத்துழைக்கும்படி அனைவரையும் தோழமையுன் கேட்டுக் கொள்கிறோம்.  
  1. நமது மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து மேளாக்களில் நமது தோழர்கள் திரளாக பங்கேற்று நமது நிறுவன வளர்ச்சிக்கு பாடுபட்டதை இச்செயற்குழு வரவேற்று அவர்களை மனதார பாராட்டுகிறது. குறிப்பாக இளம் JE  தோழர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது. சில தலமட்டங்களில் நிர்வாகம் போதுமான ஒத்துழைப்பு வழங்காத போதும், நமது  தோழர்கள் நிறைவான சேவையைக் கொடுத்ததற்கு இச்செயற்குழு பாராட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் குறைபாடுகளைக் களைந்து மேளாக்கள் இன்னும் சிறக்க நடவடிக்கை எடுக்க இந்தச் செயற்குழு கேட்டு  கொள்கிறது.

  1. இன்றைய சூழலில் தனியார் நெட்வொர்க்கிலிருந்து நமது BSNL  நெட்வொர்க்கிற்கு வாடிக்கையாளர் வந்த வண்ணம் உள்ளனர். அதற்கேற்ப நமது நெட்வொர்க்கை இன்னும் (RF OPTIMISATION, SIGNAL PROBLEMS, DATA PROBLEMS, CALL CONGESTION  முதலிய தொழில்நுட்பப் பிரச்சனைகளை சரிசெய்து)  நமது நெட்வொர்க்கைப் பலப்படுத்திட  விரைந்து நடவடிக்கை எடுத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  2. ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு பிரச்சனையில் மாவட்ட சங்கம் நிர்வாகத்தை அணுகும் போதெல்லாம் மிகுந்த அக்கறையோடு செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு மனதார பாராட்டுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் சிக்கன நடவடிக்கை பெயரில்  எந்தவொரு ஒப்பந்த ஊழியரையும்  நீக்காமல்  SALES / MARKETING பகுதியில் பயன்படுத்திட   இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  3. ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நமது மாவட்டத்தின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் மிக அக்கைறையோடு அணுகி  செயல்படும் NFTE மாநிலச்  சங்கத்தை இச் செயற்குழு நன்றியோடு பாராட்டுகிறது.
  4. நமது மாவட்டத்திற்குப் புதிதாக பொறுப்பேற்ற பொது மேலாளரை வாழ்த்தி வரவேற்கிறோம். அளவில் மிகப் பெரிய மாவட்டம், பிரசனைகளுக்கும் குறைவில்லை. வளர்ச்சிப் பாதையில் அடைய வேண்டிய இலக்கு மிகப் பெரியது. அதனை ஏற்று செயல்படுத்த ஊழியர்களும் ஆர்வமாக உள்ளனர். எனவே புதிய பொது மேலாளரிடம் மிக அதிகமாக எதிர்பார்த்தோம்.
ஆனால், நமது இரண்டு மாத அனுபவம் நமக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக உள்ளது என்பதனை இச் செயற்குழு மிகுந்த வருத்தத்துடன்  பதிவு செய்கிறது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதால், நமது சங்கம் பிரச்னைத் தீர்வுகளுக்காகத் திட்டமிட்ட போராட்ட இயக்கங்களைக் கூட ஒத்தி வைத்து, மீண்டும் பிரச்சனைகளைத் தொகுத்து கடிதம் கொடுத்து பொதுமேலாளருடன் பேட்டிக்கு அனுமதி கோரினோம். நினைவூட்டுக் கடிதங்கள் எழுதினோம்.
ஆனால் பொது மேலாளர் நமது சங்கத்தை அழைத்து இதுவரை பேசவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை. இந்த அணுகுமுறை தொழிலமைதியை மேம்படுத்த உதவாது என்பதை இச் செயற்குழு  அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. இந்த மாவட்டத்தில் தலமட்ட  கூட்டு ஆலோசனைக்கு குழு, ஒர்க்ஸ் கமிட்டி எதுவும் செயல்படுவதில்லை என்ற ஒன்றே, பிரச்சனைகள் மற்றும் மாற்றல்கள் முதலிய ஊழியர் பிரச்சனைகளின் நிலைமையின் தேக்கத்தை உணர்த்தப் போதுமான உதாரணமாகும். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இச் செயற்குழு கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களுக்கு அறைகூவல் விடுகிறது.

04-04-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் .
10-04-2018 அன்று மாவட்ட தலைநகரில் தர்ணா போராட்டம்,
17-04-2018  தொடர் பட்டினிப்போர் போராட்டம்.


நியாயங்கள் போராட்டங்களினால்தான் நிலைநாட்டப்படுகின்றன. இயக்கங்களில் பெருமளவில் பங்கேற்க இச்செயற்குழு தோழர்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment