சீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 1)
NFTE கடலூர் மாவட்டச்
சங்கத்தின் 6-வது மாவட்ட
மாநாடு
கோயில்
நகரமாகக்
கொண்டாடப்படும் சிதம்பரம் நகரில் 2018 மே மாதம் 8-ம் நாள்
மிக்கச்
சீரோடும்
சிறப்போடும் நடைபெற்றது. மாவட்டத்
தலைவர்
தோழர் R.செல்வம்
அவர்கள்
தலைமையேற்றார்கள்.
வண்டிகேட், சென்னை
சாலையில்
அமைந்துள்ள சிவம் மஹாலில் காலை 8-30 மணிக்கே பெரும்பான்மைத் தோழர்கள் திரண்டு விட்டார்கள். அண்ணாச்சி D.ரங்கநாதன் பெயரில் நுழைவு வாயில், அருகே பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள், தொலைபேசி நிலையத்திலிருந்து வழிநெடுக பட்டொளிவீசிப் பறந்து வரவேற்றன, கொடிகள்.
மண்டபத்தின் முகப்பில் அமைந்த திடலில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள். கூடியிருந்த தோழர்கள் முழக்கமிடத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புச் செய்தார், வரவற்புக்குழுத் தலைவர் திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) மூத்தத் தோழர் S. தமிழ்மணி சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார். கடலூர்
தோழர் E. விநாயகமூர்த்தி அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் தேசப் பற்றையும் சமூக அக்கறையோடு கூடிய சங்கப்பற்றையும் எதிரொலித்தன.
கீழ்த்தளத்தில் விருந்தோம்பல் கூடம், மறைந்த சிதம்பரம் தோழர் P.கன்னையன் அவர்கள் பெயரால் அமைந்திருந்தது. படியேறி
முதல்
தளம்
செல்ல, அண்ணாச்சி D. ரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது, மலர் தூவி அஞ்சலி செலுத்த.
விசாலமான, அலங்கார
விளக்குகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம். மேடையில்
பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் நமக்கெல்லாம் மார்க்ஸிய ஞானத் தந்தையுமான D.ஞானையா
அவர்களின் திருஉருவங்களைத் தாங்கி மாநாட்டின் திசைவழிக்கு ஒளிகாட்டிக் கொண்டிருந்தன. அரங்கம் ”மார்க்ஸிய ஞானத் தந்தை D.ஞானையா
அரங்கம்” என்ற
பெயர்
பொறிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது,
நமது துறை - நமது
இயக்கம்
இன்றைக்கு எதிர்கொள்ளும் செல் கோபுர துணை நிறுவன அமைப்புக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப்படுத்துவதாய், தில்லை நடராசர் பொற்கோயிலும் அதனருகே உயர்ந்ததொரு செல் கோபுரமும் சித்தரிக்கப்பட்டு அதன் மீது ” எங்கள்ஆலயம் — எங்கள் BSNL ” ஒன்றிணைந்து போராடுவோம்!! பாதுகாப்போம்!என்று பொறிக்கப்பட்டிருந்தது.
மாநாட்டின் குறிப்பிடத் தகுந்த சிறப்பு அம்சம் பெரும்பான்மைத் தோழர்களும் தோழியர்களும் தாமதமின்றி வந்ததும், காலை 9 மணிக்கே கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கியதும் ஆகும். ’நல்ல துவக்கம், வெற்றியில் செம்பாதி’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, மாநாடு சீரோடு துவங்கியது. அடுத்து குறிப்பிட வேண்டியது, 369 உறுப்பினர்களில் 304 பேர் மாநாட்டுப் பிரதிநிதிகளாக ரூபாய் 400/- செலுத்தி பதிவு செய்து கொண்டது. இதில் மாவட்டத் தலைவர். செயலர் உட்பட யாருக்கும் விதிவிலக்குப் பெறவில்லை என்பது. அது தவிர TMTCLU சங்கத்தைச் சேர்ந்த 76 பேர் உட்பட நூற்றுக் கணக்கில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்றத் தோழர் H. இஸ்மாயில் மரைக்காயர் அவர்களை வரவேற்புக்குழுப் பொதுச் செயலராகச் செயல்பட்ட வரவேற்புக்குழுத் தோழர்கள் ஒவ்வொருவரும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றியதும் உணவின் சுவையின் சிறப்பும் விருந்தோம்பலும் தனியே பாராட்டப்பட வேண்டியவையாகும். வரவேற்பு குழுவின் சார்பாக அதன் பொதுச்செயலர் தோழர் H.இஸ்மாயில் மரைக்காயர் அவர்களும், மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் மாநாட்டிற்கு வருகை புரிந்த ஒவ்வொருவரின் சிறப்புகளைக் கூறி வரவேற்ற விதம் அனைவரையும் கவர்ந்தது.
தோழர்
R.செல்வம் மாநாட்டுத் தலைமையுரை ஆற்ற, தோழர் P. அழகிரி
அஞ்சலி
உரையாற்றினார். வரவேற்புக்குழுத்
தலைவர்
திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) தமது வரவேற்புரையில் பிரம்மாண்டமாய் கூடியிருக்கும் தோழர்களின் கட்டுப்பாட்டையும் சரியான நேரத்தில் கொடியேற்றம் துவங்கியதையும் வியந்து பாராட்டி, தன்னால் சிறிது காலதாமதம் ஏற்பட்டதைப் பொறுத்தருள வேண்டி மாநாட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மாநிலச்
செயலாளர்
தோழர்
K. நடராஜன் சிறப்பான துவக்கவுரையாற்றினார். அவர்
தமது
உரையில், “ நேற்று
மாலை
சிறப்பாக
மாவட்டச்
செயற்குழு நடைபெற்றது. கடந்த
ஐந்து
ஆண்டுகளுக்கான செயல்பாட்டறிக்கை ஒரு நெடிய டாக்குமெண்டரி போல மிகச் சிறப்பாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. நன்கொடை
அளித்த
தோழர்களுக்கும் கிளைகளுக்கும் நன்றி. நேற்று
காரில்
வரும்போது ஒரு சம்பவம். மிக நெருக்கமாகப் பார்க்கிங் செய்யப்பட்ட காரை வெளியே எடுக்க டிரைவர் ஒரு எதார்த்தமான யோசனை கூறினார். டயரின் பிரஷரை சற்றுக் குறைத்தால் சுலபமாக காரை வெளியே எடுக்கலாம் என்பதுதான் அந்த யோசனை. யோசித்துப் பார்த்தால், நமது இயக்கத்திற்கும் ஏன் வீட்டிற்கும் கூட அது பொருந்தும். பிரஷரைக்
குறைப்போம். மாநாட்டிலிருந்து
ஒற்றுமையாகக் கலைவோம், அடுத்தச் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியாவில் வெல்வோம் என்பதுதான் மாநாட்டுத் துவக்க உரையாக நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.
பெரும்பான்மையோருக்கு இது கடைசி ஊதிய மாற்றமாக இருக்கக் கூடும். ஒரு தேக்கம்
நீடித்தது. டெல்லியில் போலீஸ்
தடையை
மீறி
நமது
பேரணிதான் தேக்கத்தை உடைத்து DOT அதிகாரியின் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தது. ஒரு பேரணியால் இதைச் செய்ய முடியும் என்றால் எதிர்வரும் போராட்டங்களில் நமது ஒவ்வொருவரின் பங்கேற்பு சிச்சயம் சாதிக்கும்.
JIO வந்தபோது
இனி BSNL இல்லை
என்றார்கள். ஆனால் மாறாக
நாம்
எழுந்து
நின்றோம், ஏர்செல்
சந்தாதாரர்களை வரவேற்றோம். கடந்த
இரண்டு
மாதங்களில் 13 லட்சம்
புதிய
சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறோம். சென்ற
முறை
வேலூர்
மாவட்டத்தைத் தத்தெடுத்தது போல இம்முறை உங்கள் கடலூர் மாவட்டத்தைத் தத்தெடுத்தோம். எங்கள்
நம்பிக்கை வீண் போகவில்லை.. மேளாக்களில் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி” என்ற மாநிலச் செயலாளர், அட்ஹாக் போனஸ் பெற்றது, பென்ஷன் ஃபண்டு மற்றும் டவர் கார்பரேஷன் பற்றியும் குறிப்பிட்டு, மாநாட்டின் நிறைவாய் தமிழகத்திற்கு நீங்கள் வழங்கும் செய்தி ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி தமது துவக்கவுரையை நிறைவு செய்தார்.
ஸ்ரீதர்
தொட்டுக்
காட்டினார். நடராஜரின் உருவம்
ஒரு மனிதனின்
இயக்க
அமைப்பாக
எனக்குத்
தோன்றுகிறது. அது நமது
சிதம்பரம் மண்ணின் சாராம்சம். தலித், மீனவர், குயவர், வேளாண்மை
என அனைத்து
குலத்
தொழில்களையும் செய்த நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிறது, பெரிய புராணம்.
’என் அம்மாவுக்கு என்று விடுதலை’ என்று நான் எழுதிய ஒரு கவிதைதான் மிகுந்த விமர்சனத்துக்கும் உள்ளானது, பாராட்டுதல்களையும் பெற்றது. வாய்ப்பு
கிடைத்தால், தில்லைக்
காளி
கோயிலுக்குப் போங்கள். நான்
அடிக்கடி
போவேன், வணங்குவதற்காக அல்ல. அவமதிக்கப்பட்ட போது சீற்றெழுந்த பெண்ணியல் தத்துவமே தில்லைக் காளி.
தோழர்
ரங்கநாதன் முன்னுதாரணத் தலைவர். எனக்குச்
சர்வாம்சத்தையும் கற்றுத் தந்தவர், ரங்கநாதன். ரகுவிடம் கற்றுக் கொண்ட அறிவு வேறு, ரங்கநாதனிடம் கற்றுக் கொண்ட ஞானம் வேறு. என்பெயரில் / ஸ்ரீதர்
பெயரில்
கோபம்
இருந்தால் விட்டுவிடுங்கள். இது ரங்கநாதன் பெயரில் நடைபெறுகின்ற மாநாடு. வெற்றிகரமாக ஒற்றுமையாக நடக்க வேண்டும். அது புதிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். மாநாடு
வெல்லட்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.
அடுத்த
பதிவு
மாநாட்டு
பிற நிகழ்வுகளும் மிகச் சிறப்பான நமது கருத்தரங்கம் பற்றியும் விவரிக்கப்படும்.
No comments:
Post a Comment