.

Sunday, May 13, 2018

                                                                                                
தலைமைப் பொது மேலாளர்
 அவர்களின் வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்

8 மே, 2018
அன்பிற்குரிய ஸ்ரீதர் மற்றும் NFTE மாநிலச் செயற்குழு உறுப்பினர்களே!

            நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கடலூர் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ளும் நாளுக்காகக் காத்திருந்தேன். நாளை காலைதான் நான் சென்னை திரும்புகிறேன்உண்மையில், உங்களது மாநாட்டு அழைப்பிதழ் கிடைத்த பிறகுதான், டெல்லியில் 10 மற்றும் 11 தேதிகளில் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களின் தலைமைப் பொது மேலாளர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அதில் கலந்து கொள்வதன் பொருட்டு 9-ம் தேதியே நான் புறப்பட வேண்டியுள்ளது.  டெல்லி கூட்டத்திற்கான தரவுகள் திரட்டப்பட்ட நிலையில், அந்தத் தரவுகளின் அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அம்சங்களைத் தயார் செய்வதற்கு இடையில் எனக்கு ஒருநாள் தான் உள்ளதுஎனவே என்னால் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமையைப் பொருத்தருள்க.

        மாவட்ட மாநாடு வெற்றிபெற எனது நல்வாழ்த்துகள்!  கடந்த ஆண்டில் நாம் செய்த அனைத்துச் சாதனைகளுக்காக எனது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துகளையும் NFTE சங்கத்திற்கு உரித்தாக்குகிறேன்.

        நன்கு வளர்ந்து வரும் மாவட்டமான  கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம் மிகுந்த நம்பிக்கை அளிக்கக் கூடியது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்கள், அமைப்புகளின் உறுதுணையோடு கடலூர் மாவட்டம் நிச்சயம் உயர்ந்த இடத்தை அடையும்.

        மாநாடு நிகழும் பொழுதில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற ஒரு நல்ல வாய்ப்பை உண்மையில் இழந்து விட்டதாகவே உணர்கிறேன்எனது உளம் நிறைந்த பாராட்டுதல்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்.

            அனைத்து நல்வாழ்த்துக்களுடன்,
                                                                                                           ….(ஒப்பம்) …                                                                                                             R. மார்ஷல் ஆன்டனி லியோ
                                                                           தலைமைப் பொதுமேலாளர்
                                                     தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம்

No comments:

Post a Comment