.

Wednesday, July 25, 2018

NFTE-BSNL
மாவட்ட செயற்குழு
மற்றும்
விழுப்புரம் கிளை மாநாடு
22-07-2018

          விழுப்புரம் மாவட்ட செயற்குழு எதிர்பார்ப்புக்களுக்கிடையே புதிய மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன் தலைமையில்  , மாவட்ட உதவிச் செயலர் தோழர் .V.மாசிலாமணி வரவேற்புரையாற்றினார். தோழர் T.சுந்தரம் ATT/VLU சம்மேளனக் கொடியை ஏற்றிய பிறகு மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.அகஸ்ட்டீன் அஞ்சலியுரையாற்றினார். பின்னர் மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் தன்னுடைய துவக்கவுரையில் நம்முன்னெ உள்ள கோரிக்கைகள், போராட்டங்கள், கடமைகளை அற்புதமான உரையாக   பதிவு செய்தார்மாவட்ட சங்க செயல்பாட்டறிக்கையையும் ஆய்படு பொருளாக சிதம்பரம் மாவட்ட  மாநாடு ரசீது, கணக்கு , நிதி ஒப்படைத்தல், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் போராட்டம், அமைப்பு நிலை, பிரச்சனைகள் தீர்வும் போராட்டமும்  வைத்து அறிமுக உரையாக மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் . 01-05-2018 முதல் 20-07-2018 காலத்திற்கான வரவு-செலவு கணக்கும் வைக்கப்பட்டது. விவாதத்தில் கிளைச் செயலர்களுக்கும். மாவட்டச் சங்க நிர்வாகிகளும் துடிப்போடு கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
          மாவட்ட செயலரின் பதிலுரையுடன் தீர்மானங்கள் வடித்தெடுக்கப்பட்டனமாவட்ட செயற்குழுவை தொடர்ந்து விழுப்புரம் கிளை  மாநாடு நடைபெற்றது. தோழர் R.ரவி-I  விழுப்புரம் கிளையின் உதவிச் செயலர் தலைமையேற்க, கிளைச் செயலர் தோழர் G.கனேசன் வரவேற்புரையாற்ற , தோழர் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச் செயலரின் துவக்கவுரையோடு மாநாடு துவங்கியது. மாநிலச் செயலரின் முழுமையான பங்கேற்புஇருந்தது.
          செயல்பாட்டறிக்கை வைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தோழர் S.மதிவாணன், தோழர் S.சண்முகம், தோழர் D.சரவணக்குமார் தலைவர் செயலர் , பொருளர் முறையே தேர்வு செய்யப்பட்டனர்தோழர் V.ஜெயராமன் மாவட்ட அமைப்புச் செயலர், தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட பொருளாளர், தோழர் D.குழந்தைநாதன் மாவட்ட உதவிச் செயலர்மேனாள் மாவட்ட தலைவர் தோழர்  R.செல்வம், மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழார் V.இளங்கோவன், மாநில துணைத் தலைவர் தோழர் V. லோகநாதன் ஆகியோர் புதிய கிளைச் சங்க நிர்வாகிகளை வாழ்த்தினார்கள். நிறைவு நிகழ்வாக மேனாள் சம்மேளனச் செயலர் தோழர்G.ஜெயராமன் அவர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகளை கவுரவித்தல்  நிகழ்வினை நிகழ்த்தி  தனது நிறைவுரையினை பதிவு செய்தார்.
          ஒற்றைச் சொல்லின் உயர்ந்த கவிதயானநன்றியைபுதிய கிளைச் செயலர் தோழர் S.சண்முகம் கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
          மாவட்ட செயற்குழு மற்றும் கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்தி கொடுத்திட்ட  விழுப்புரம் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி......
விழுப்புரம் மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்
தீர்மானம் 1 சிதம்பரத்தில் மாவட்ட மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திக் கொடுத்தத்   தோழர்  H. இஸ்மாயில் மரைக்காயர் தலைமையில் செயல்பட்ட சிதம்பரம் வரவேற்புக்குழுத்  தோழர்களை இச்செயற்குழு மனதாரப் பாராட்டுகிறதுமாவட்டச் சங்கத்தின் சார்பில் அந்தத் தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் பாராட்டுவிழாவை விரைவில் நடத்துவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 2  தோழர் சிரில் நினைவு அறக்கட்டளைச் சார்பில் 19வது தமிழ்விழாவை சிறப்புற நடத்திய அறக்கட்டளை பொறுப்பாளர்களையும் அறக்கட்டளை உறுப்பினர்களையும் இச் செயற்குழு பாராட்டுகிறதுமாநாட்டிற்குப் பிறகு உறுப்பினர்கள்  இணைக்கப்பட்டு அறக்கட்டளை விரிவுபடுத்தப்பட்டதை இச்செயற்குழு அங்கீகரிக்கிறதுவங்கியில் உள்ள அறக்கட்டளை வைப்புநிதிக் கணக்கு அறக்கட்டளைச் செயலாளர் தோழர் வீ. லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் தோழர் செ. ஆனந்தன் இணைந்த பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதை இச்செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.

தீர்மானம் 3 ஒப்பந்த ஊழியர் பிரச்சனைத் தீர்வில் BSNL ஊழியர் சங்கத்தோடு இணைந்து போராடிய மாவட்டச் சங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கதுபணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மனிதாபிமானத்தோடு மீண்டும் பணியில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வற்புறுத்துகிறதுஒப்பந்த ஊழியர்களும் கூடுதல் ஈடுபாட்டோடும், கவனத்தோடும் பணியாற்றுமாறு தோழமையுடன் அறிவுறுத்துகிறது.

தீர்மானம் 4 எதிர்வரும் அகில இந்திய சங்கத்தின் கூட்டுபோராட்ட இயக்கங்களில் தோழர்கள் சக்திமிக்கதாகக் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்ய தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்மூன்று நாள் தொடர் போராட்டம் என்பதால் அந்தந்த தேதிகளில் குறிப்பிட்ட கிளைத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள திட்டமிட்டு இயக்கங்களை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.

தீர்மானம் 5 மாவட்ட நிர்வாகம் ஊழியர் பிரச்சனைகளைச் சங்கங்களோடு விவாதிப்பதில் குறைசொல்ல முடியாதுநிறையவே விவாதிக்கிறார்கள், உறுதிமொழியும் அளிக்கிறார்கள்ஆனால் உறுதியளித்தபடி பிரச்சனைத் தீராமல் தாமதமாவதும் நீடிப்பதும் ஊழியர்களிடையே சோர்வை ஏற்படுத்துகிறது. அவர்களது சேவைத் திறனைப் பாதிக்கிறதுதாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றேஎனவே இச்செயற்குழு மாவட்ட நிர்வாகத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறதுகாரணமின்றி தாமதமாகும் பிரச்சனைகளில் போராட்ட இயக்கங்களைத் திட்டமிடவும் அறிவிக்கவும் மாவட்டத் தலைமையகத் தோழர்களுக்கு இச்செயற்குழு அதிகாரமளிக்கிறது.  

தீர்மானம் 6 மாவட்டச் சங்க அலுவலகத்திற்கு உடனடியாகப் புதிய கணிணியும் கூடுதல் இடமும் வழங்க மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் 7  திண்டிவனம் கோட்ட அதிகாரியின் அதிகார அத்துமீறல்களை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கிறதுஅணுகுமுறை மாறாத பட்சத்தில் போராட்டங்கள் தவிர்க்க இயலாதவை என இச்செயற்குழு மிகுந்த பொறுப்போடு மாவட்ட நிர்வாகத்தைக் காலத்தே எச்சரிக்க விரும்புகிறது

தோழமையுடன் 
இரா.ஸ்ரீதர் 
மாவட்டச் செயலர்,
கடலூர் 



No comments:

Post a Comment