.

Wednesday, July 18, 2018

NFTE - BSNLEU – TMTCLU –TNTCWU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்.

        NFTE- BSNLEU – TMTCLU –TNTCWU  சங்கங்களின் சார்பாக 17-07-2018 அன்று மாலை நேர தர்ணா போராட்டம்  நடைபெறவிருந்தது. இந்நிலையில் நமது NFTE – BSNLEU  ஆகிய இரண்டு மாவட்டச் சங்கங்களை    நமது மாவட்ட நிர்வாகம் அன்று மதியம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.                      ( பேச்சுவார்த்தையில்  நமது NFTE  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் மற்றும் BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்)
          மாவட்ட நிர்வாகம் நமது கோரிக்கைகளை மிக விரைவாக முடித்து வைப்பதாக உறுதியளித்தது. மற்றும் மாலை நேர தர்ணா போராட்டம் , 21-07-2018 அன்று நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தையும் ஒத்திவைக்குமாறு மாவட்ட நிர்வாகம்  நமது மாவட்ட சங்கங்களை கேட்டு கொண்டது. அதன்பெயரில் 17-07-2018 அன்று நடைபெறவிருந்த மாலை நேர தர்ணா போராட்டம்  விளக்க கூட்டமாக மாற்றப்பட்டு கூட்டம் சுமார் 5.40 மணியளவில் துவங்கியது.
          விளக்க கூட்டத்திற்கு TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் , TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் S.V பாண்டியன்  கூட்டுத் தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.  TMTCLU சங்கத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  நமது கோரிக்கைகளை விளக்கி பேசியதோடு மட்டுமில்லாமல் நாம் நமது செயல்பாடுகளை இன்னும் துரிதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தமது உரையில் பதிவு செய்தார். NFTE மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி  ஒப்பந்த தொழிலாளர்கள் நலனில் எப்போதும் NFTE  மாநிலச் சங்கம் உடனிருக்கும் என்றும் உங்களது  இந்த நியாயமான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய BSNLEU  மாவட்ட செயலர் தோழர் K.T சம்பந்தம் மாவட்ட நிர்வாகத்தினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றி விளக்கமளித்தார். அடுத்து  TNTCWU  சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் M. பாரதி மற்றும் TNTCWU மாவட்ட பொருளாளர் தோழர் D.முரளி ஆகியோர் கூட்டத்தின் முக்கியவத்தை விளக்கி பேசினார்கள்.
          சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த குடந்தை பகுதி NFTE மாவட்ட செயலரும் , TMTCLU மாநில பொருளாளருமான தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   நமது போராட்டம் எப்படி இருக்க வேண்டும். அதற்கேற்ப நாம் எப்படி நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் பேசியதோடு மட்டுமில்லாமல் நமது போராட்டத்தினை வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். அடுத்ததாக CPI(M)  நிர்வாக குழு உறுப்பினர் தோழர் N.பால்கி  எந்த ஒரு கோரிக்கைகளையும்  தொடர் போராட்டங்களினால்   வெற்றி காண முடியும் . அந்த வகையில் உங்களது இந்த நியாயமான போராட்டம் வெற்றி  பெறட்டும் வாழ்த்துக்கள்  என தமது உரையில்  பதிவு செய்தார்.
          இறுதியாக TMTCLU  சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் A.S குருபிரசாத் விளக்க கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்  நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.( கூட்டத்தில் கடலூர் வெளிபுற பகுதி  கிளைச் செயலர் தோழர் E. விநாயகமூர்த்தி , பொதுமேலாளர் அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் V.கிருஷ்ணமூர்த்தி,  நெய்வேலி கிளைச் செயலர் தோழர் K. ஜெய்சங்கர்,  மற்றும்  TMTCLU  சங்கத்தின் மாநில இனைப் பொதுச் செயலர் தோழர் S. தமிழ்மணி , மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், NFTEயின் மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.K , NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S. நடராஜன் , TMTCLU கடலூர் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம், உள்பட பல மாவட்ட சங்க , கிளைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

          ஒவ்வொரு  கூட்டத்தையும் வெற்றி பாதையில் எடுத்து செல்வது போல் இந்த கூட்டத்தையும் வெற்றி பாதையில் இட்டுச் சென்ற விதம் அது NFTE யின் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதருக்கே உரித்தானது..  நன்றிகள் பல..

                                                                                                தோழமையுடன்
      NFTE- BSNLEU – TMTCLU –TNTCWU 
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.

No comments:

Post a Comment