NFTE –
TMTCLU
மாவட்ட
சங்கங்கள், கடலூர்.
ஆர்ப்பாட்டம்
NFTE – TMTCLU மாநில
சங்கங்களின் அறைகூவலின் படி தமிழகத்தில் பணிபுரியும் ( கடலூர் மாவட்டத்தினை தவிர்த்து
) ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு
மாதம் சம்பளம் வழங்காதததினை
கண்டித்து தமிழகம் முழுவதும் காத்திருப்பு
போராட்டம் நடைபெறுகிறது. நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக 17-09-2018 அன்று மாலை 5மணிக்கு பொது
மேலாளர் அலுவலக முன்பாக ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் தோழர் P.அன்பு
தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள்
பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட செயலர் TMTCLU, தோழர் R.பன்னிர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU, தோழர் M.S.குமார்
மாவட்ட தலைவர் TMTCLU, மாநில இனைப் பொதுச் செயலர் தோழர் S.தமிழ்மணி
மற்றும் NFTE மாநில சங்க
சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் ஆகியோர் தங்களது கண்டனத்தை பதிவு
செய்தனர்.
NFTE மாவட்ட செயலர்
தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் நிர்வாகத்தின்
மெத்தன போக்கை கண்டித்தும் . ஊழியர்களின்
நலனில் அக்கறையோடு செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தனது
உரையில் பதிவு செய்தார்.
இறுதியாக
தோழர் P.சுந்தர்ராஜ் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது..
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர் DS/NFTE
A.S.குருபிரசாத் DS/TMTCLU
No comments:
Post a Comment