.

Tuesday, October 9, 2018



AUAB-கூட்டம் -8.10.2018
8.10.2018 அன்று BSNL அனைத்து யூனியன்கள் மற்றும் அசோசியேஷன்கள் சார்பில் புது டில்லியில் உள்ள NFTE சங்க அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. 24.07.2018 அன்று AUAB உடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வழங்கிய உத்தரவாதங்கள் / திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை AUAB அதன் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இது சம்பந்தமாக BSNL நிர்வாகத்தின் பதிலுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தது. AUAB தலைவர்களின் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், AUAB அதிரடி செயல்திட்டங்களை அறிவித்துள்ளது அந்த அறிவிப்பின்படி,

i) 29.10.2018 அன்று அகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி நமது போராட்ட கோரிக்கைகளை விளக்குவது எனவும்,

ii) 30.10.2018 அன்று அகில இந்திய, மாநில, மாவட்ட அளவிலான  ஒரு முழு நாள் தர்ணா.

iii) 14.11.2018 அன்று மாநில, மாவட்ட அளவில்  பேரணிகள் நடத்தி சம்பந்தப்பட்ட CGMs / GM களுக்கு மெமோராண்டம் சமர்ப்பித்தல்.

iv) AUAB கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், 30.11.2018 க்குப் பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முழுஅளவில் திட்டமிடவும்,

v) AUAB CMD க்கு போராட்ட விளக்கக் கடிதங்களை வழங்குவது.

அ) தனியாருக்கு Non BSNL siteகளை   உட்கட்டமைப்பு பராமரிப்பு, நிர்வகிக்க வருடாந்திரம் ரூ.1800 கோடி வழங்குவதை கண்டித்து மற்றும்

b) உயர்நீதிமன்றம் தில்லி தீர்ப்பின் படி DOT க்கு அனுமதிக்கப்பட்ட ITS  அதிகாரிகள் தவிர மற்ற அதிகப்படியான ITS அதிகாரிகளை திரும்ப அனுப்புதல்.

BSNLன் அனைத்து யூனியன்கள் மற்றும் அசோசியேஷன்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து பொது கோரிக்கைகளில் கூட்டாக போராட வேண்டும்.
பொதுக்கோரிக்கைகள்:

1) 15% ஃபிட்மெண்ட் உடன் 3 வது PRC செயலாக்கம்

2) ஓய்வூதிய திருத்தம்

3) அதிகபட்ச ஊதியத்திற்கு பதிலாக உண்மையான அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதிய பங்களிப்பு.

4) BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் உடனடி ஒதுக்கீடு.


No comments:

Post a Comment