.

Wednesday, November 21, 2018

37வது தேசிய கூட்டாலோசனைக் கூட்ட நிகழ்வுகள்



தேசிய கூட்டாலோசனைக் குழுவின் 37வது கூட்டம் திருமதி T.சுஜாதா ரே ,இயக்குநர் மனிதவளம் அவர்களது தலைமையில் 20.11.2018 அன்று நடைபெற்றது.


திரு A.M.குப்தா, GM(SR) அவர்கள் குழு உறுப்பினர்களை வரவேற்று பேசுகையில் நமது நிறுவனம் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளதாகவும். இக்குழு ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசிக் களைவதற்கான தளமாகும் என்றார். நாம் 4ம் தலைமுறை தொழில்நுட்பத்தை பற்றி திட்டமிடுகையில் தொழில் நுட்பம் 5ம் தலைமுறைக்கு பெரும் வேகமெடுத்த தாவ தயராகிவிட்டது என்றார். நமது நிறுவனம் தடைகளை தாண்டி பயணிக்குமே தவிர ஒருகாலும் தயங்கி நிற்காது என்றார். 

கூட்டத்தின் தலைவர் திருமதி சுஜாதா ரே தனது நீண்ட உணர்ச்சி பூர்வமான உரையில் ஊழியர் பிரச்சினைகள் முன்னிலைப் படுத்தப்பட்டு நிறுவனத்தின் அதிகாரமிக்க குழுவால் தீர்க்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சந்தேகமின்றி நிறுவனம் கடினமான காலத்தில் பயணிப்பதாகவும் ஊழியர் தரப்பு நிர்வாகத்திற்கு SWAS and BSNL at your doot Step போன்ற இயக்கங்களின் மூலம் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நிதி சுழற்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை ஊழியர்களின் நலனையும் நிர்வாகத்தின் நலனையும் பாதித்துள்ளதாகவும், பணம் சம்பந்தமான விசயங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும் சூழ்நிலை ஊழியர்களின் பெரும் பங்களிப்பினால் மேம்பட்டு வருவதாகவும் கூறினார். பல்வேறு அரசு திட்டங்களை நமது நிறுவனம் செயலாற்றி வருவதால் அடிப்படையான செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுக்காக்கப்பட்டு வருவதாகவும், கடினமான சூழ்நிலையில் நாம் ஒன்றுபட்டு வலிமையாக திகழ வேண்டும் என்றார். நமது நிறுவனம் முதன்மையான நிறுவனம் எனவும் தேசிய பேரிடர் காலங்களில் அதன் பங்களிப்பை நமது இலாகா அமைச்சகம் பாராட்டியுளதாகவும் குறிப்பிட்டார். 


தோழர் சந்தேஸ்வர் சிங் தனது உரையில் வளர்ச்சி, மேன்மை மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து பேசியமைக்காக கூட்டத்தின் தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இருதரப்பும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்பதாக குறிப்பிட்டார். 




பீகார் , உத்தரபிரதேசம் , மத்திய பிரதேசம் , அசாம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் TSM தோழர்களுக்கு Presidential Order வெளியாவதில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படமால் உள்ளதைக் குறிப்பிட்டார். பீகார் மாநிலத்தில் மட்டும் 65 தோழர்களுக்கு Presidential உத்தரவு வெளியாகமல் உள்ளது எனவும் ஓய்வு பெற்ற TSM தோழர்களுக்கு Presidential உத்தரவு கிடைக்காததால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். நிர்வாகப் போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையில் டெலிகாம் டெக்னீசியன் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினார். கேசுவல் ஊழியருக்கான ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்தும் விவகாரம் தற்போது வரை தீர்க்கப்படவில்லை என்பதையும் , ஊழியர்களின் உள்நோயாளிக்கான சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் வழங்கப்படாமல் உள்ளதையும் , ரூல் 8 மாற்றும் 9ன் கீழான மாற்றலில் மாற்றல் மற்றும் விடுவிப்பதில் உள்ள சிக்கல்களையும் தனது உரையில் குறிப்பிட்டார். 

ஊழியர் தரப்புச் செயலர் தலைமை உரையில் குறிப்பிடப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு தொடரும் என மறுதலித்தார். அனைத்து கேடருக்குமான போட்டித் தேர்வுகளயும் எழுத்துத் தேர்வாக நடத்துவது. டெர்ம் குருப் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்வது, ஓய்வூதியப் பலன்களை உயர்த்துவது, ஊதிய கமிட்டி மீண்டும் கூடி வீட்டு வாடகைப்படி விவகாரத்தால் முடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வது ஆகியவை குறித்து பேசினார். கூட்டத்தின் தலைவர் பதிலளிக்கையில் கேசுவல் ஊழியர் சம்பளதிருத்தம், இணையம் மூலமான போட்டித் தேர்வுக்கு முன்னதாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள சாதமாக பரிசீலிக்கபடும் என தெரிவித்தார். 

விவாதக் குறிப்புகள் 

1. 01.08.2018 அன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கேசுவல் ஊழியர் நிரந்தரம். 

10 வருட சேவை முடித்த கேசுவல் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கு நீதிமன்ற தீர்ப்பின் மீது Legal Opinion பெறப்படும். 

2. 01.10.2000க்குப் பிறகு TSM ஆக இருந்து TM ஆக நியக்கக்கப்பட்ட ஊழியர்களுக்கு Presidential Order வெளியிடுதல். 

தேவையான விபரங்கள் தொலைத்தொடர்பு இலாகாவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

3. 01.10.2000 அன்றோ அல்லது பின்போ நிரந்தமாகிய TSM ஊழியர்களை DOT ஊழியர்களாக கருதி NEPP திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்குதல். 

இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது நிறுவனத்தின் CMDன் பரிசீலனைக்குப்பிறகு DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

4.ஹிமாச்சல் பிரதேச மாநில DOT CELL அதிகாரிகள் GPF Payment மேற்கொள்ளும் பணியை ஏற்க மறுக்கும் விவகாரம். 

Director(Finance) அவர்கள் DOT இலாகாவின் Member(Finace) அவர்களுடன் கலந்துபேசி முடிவு செய்வார். 

5. 10+2 முடிக்காமல் நேரடியாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் JE 07.06.2015 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றுள்ளனர் அவர்கள் மீது ஹைதராபாத் உயர் நீதி மன்றம் 2017ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்து. 

தீர்ப்பு அமுல்படுத்தப்படும். 

6.சொத்து வாங்குவதற்கான அனுமதி பெறுவதற்கான தகுதி மதிப்பை உயர்த்திடுக. 

தொகையை உயர்த்துவதற்கு வழியில்லை. சட்ட வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

7. முதுநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் ( Sr.Hindi Translator ) மற்றும் ராஜ் பாஷா பதவிகளுக்கு ஆளெடுப்பு செய்திடுக 

ஒரு மாத காலத்திற்கு காலிப் பணிடங்கள் குறித்து அறிவிக்கப்படும். 

8. ஆந்திர மாநில ஊழியர்கள் ஹைதராபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக் கடிதம் வழங்க ஆந்திர மாநில CGMன் ஒப்புதலின்றி ஆந்திர மாநில GMகளுக்கு அதிகாரம் வழங்கிடு. 

நிர்வாகம் கோரிக்கையை ஏற்கவில்லை இருப்பினும் மேற்கு வங்கம் , கொல்கத்தா தொலைத் தொடர்பு மாநிலங்களில் கையாளப்பட்ட வழிமுறைகள் பரிசீலிக்கப்படும். 

9. குவாஹாத்தி – இட்டாநகர் – அஸ்ஸாமின் வடக்குப்பகுதி ஆகிய பகுதிகளுக்கிடையேயான இணைப்பை கண்ணாடி இழை கேபிள் மூலம் NETF வழியாக மீட்டிடுக 

தடையற்ற சேவை தொடர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

10. TSM ஊழியர்களை BSNL ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்கான Presidential Order வெளியாவதில் ஏற்றுக் கொள்ள முடியாத காலதாமதம். 

பீகார் , மத்தியப் பிரதேசம் , உத்திரப்பிரதேசம்(மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநில நிர்வாகங்களிடமிருந்து இதுகுறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உத்திரப்பிரதேச(கிழக்கு) மாநில நிர்வாகம் விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. 

11. BSNL Non.Executive ஊழியர்களுக்கு Term Grup Insurance திட்டத்தை அமுலாக்கு. 

மார்ச் -2019க்கு முன்பாக அமுலாக்கம் குறித்து இறுதி செய்யப்படும். 

12. BSNL தலைமையகம் சீராய்வு மனுக்களை தேவையற்ற வகையில் சமர்ப்பிப்பதை தவிர்த்திடுக 

முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்தும் விவகாரம் லக்னோ உயர்நீதி மன்றம் வெளியிடும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 

13. 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9000/- ஆக உயர்த்திடுக. 

Director(HR) DOT இலாகாவுடன் பேசி முடிவெடுப்பார். 

14. இணையம் மூலமான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள Non-Executive ஊழியர்களுக்கு கணினிப்பயிற்சி வழங்கிடுக. 
பயிற்சி விரைவில் வழங்கப்படும். 

15. கேசுவல் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 

கூட்டத்தின் தலைவர் 3வது ஊதிய மாற்றத்தோடு கலக்காமல் தனியாக பரிசிலிக்க உத்தர விட்டார்.

No comments:

Post a Comment