.

Tuesday, November 20, 2018

புயல் பாதிப்புதுயர் துடைக்க முன்வருவீர்!


அன்புள்ள தோழர்களே, தோழியர்களே!
            வணக்கம்நாம் தான் எதிர்பார்த்தோம், நம்மைத் தேடி வருமென்று!   தயாராகக் கூட இருந்தோம். அனுபவப்பட்டவர்களாயிற்றே!    கஜா புயல் குறித்துத்தான் இந்த வேண்டுகோள்!
          தானே தந்த துயரம் தலைமுறையும் மறவாது.  ‘கேட்டிலும் நன்மை உண்டு என்பார் வள்ளுவர்அல்லலுற்று கையறுநிலையில் இருக்கும் போதுகை கொடுப்பார் யார்? கண்ணீர் துடைப்பார் எவர்? வாரி வழங்கா விடினும், ஆறுதலாய் ஒருசொல் கூறவோர் மனிதருண்டோ?
           மனித மனங்கள் பதறுரும்அதை நாம் அனுபவித்திருக்கிறோம் …  அது மட்டுமாமனிதம் இன்னும் மாண்டுவிடவில்லை என்று உதவிக்கரங்கள் ஓடோடி வந்தனபாலம் கட்டுவதாய் பெரும் பணி, அணிலாய் அதில் சிறு பங்கு எனகுடந்தை, தஞ்சை, சேலம், காரைக்குடி, சென்னை என  தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு வந்தார்களே …   நம் நெஞ்சை எல்லாம் நிறைத்தார்களே...

                தமிழகத்திற்கே சோறிடும் சேற்று பூமியாம் காவிரிப்படுகை மாவட்டங்கள் இன்றுகஜா புயலடித்து ஓய்ந்த பின்னும்புயலின் பாதிப்பிலிருந்து மீளாதிருக்கின்றனர்தஞ்சை விவசாயிகளின் கவலைஆச்சரியப்பட வைக்கிறது.
                வள்ளுவர் வாழ்த்திய விவசாயியல்லவா, என் பசிக்கு இன்று யார் தருவார் என்பது அவர்கள் கவலை யில்லையாம். . . நாளை தமிழகம் அரிசி இன்றி பசியால் வாடுமோபுயலால் இந்த போகம் போனதேபோன கரண்டு இன்னும் வரலையே . . . எப்படிப் பயிர் வைப்பேன்வானம் பார்த்து ஓங்கிய தென்னை போர்க்களத்து வீரர்களாய் முறிந்து போனதுவே …  மகிழ்வைக் கூட்டும் குடந்தையின் வெற்றிலைக் கொடிக்கால்கள் நாசமானதுவேஎன    அழுவது அல்ல, எழுவது என்று அவர்கள் மனத்தளவில் தயாராகி விட்டார்கள்
நாம் என்ன செய்யப் போகிறோம்?
                புயல் காணா புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமநாதபுரம் என புதிது புதிதாய்  இடங்களைத் தேடி புயல் புரட்டிப் போட்டு விட்டு சென்றுள்ளது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?
கோவையில் நடைபெற்ற நமது மாநிலச் செயற்குழுவில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டபோது –       உங்களின் உதவும் கரங்களை நம்பி --      பிறர் துயர் காணச் சகியாத நெஞ்சின் ஈரம் எண்ணி--   நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதியாக          முதல் தவணை   தொகை  ரூபாய் பத்தாயிரம்  ரூ10,000/--                 வழங்கி உள்ளோம்.                விரைந்து உங்கள் பங்கைச் செலுத்துங்கள் எனத் தோழமையோடு  வேண்டுகிறோம் !
            கூடுதலாக நிதி திரண்டி, இரண்டாம் தவணையைத் தந்திடுவோம்!
            புயலெனப் புறப்படுங்கள் !   மழையெனப் பொழியுங்கள்,  நன்கொடைகளை !!
 எவ்வளவு வழங்கினாலும் நமது உள்ளம் திருப்தியுறாதுஏனெனில் கைமடங்கா விவசாயிகள் கை ஒடிந்து உள்ளார்கள்.   நமது நெஞ்சம் சற்றே அமைதியுற அள்ளித் தாருங்கள் 

எனத் தோழமையோடு வேண்டும்,
 G. கணேசன்                       A.S. குருபிரசாத்                    இரா. ஸ்ரீதர்

            மாவட்டத் தலைவர்           மாவட்டப் பொருளாளர்            மாவட்டச் செயலாளர்

2 comments:

  1. அணிலாய் சிறு பங்கு என்ற வரலாற்று பதிவில் தவறுதலாக சேலத்தின் பெயர் விடுபட்டு உள்ளது.

    ReplyDelete
  2. பாலம் காட்டுவதாய் பெரும்பணி., அணிலாய் அதில் சிறு பங்கு என., என்ற வரலாற்று பதிவில்., தவறுதலாக., சேலம் பெயர் விடுபட்டு உள்ளது.

    ReplyDelete